தமிழ்த் திரையுலகினருக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கலைஞர் பெயரில் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் தேதி விருதுடன் ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்,