cinema

img

ஒரு தடவையாவது மன்னிப்புக் கேளுங்கள் மிஸ்டர் ரஜினி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் நாட்டில் எது நடந்தாலும் கண்டு கொள்ளாத நடிகர் ரஜினிகாந்த் சம்மன் இல்லாமல் அங்கு  ஆஜரானார். இவரை இயக்கியவர்கள் சொன்னபடி அங்கு போய் துடிப்பது போல் நடித்து விட்டு வந்தார். துப்  பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவரை பார்க்கச் சென்ற போது, ரஜி னியை பார்த்து அவர், யார் நீங்கள்? என்று சூடாகக் கேட்டார்.  அந்தச் சூடு தணியாமல் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தினார்.  போராட்டம் நடக்கும் இடத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும், முதலில் கலவரக்காரர்கள் போலீசாரை தாக்கியதால்தான் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று மனச்சாட்சி யை கழற்றி வைத்துவிட்டு பேட்டி கொடுத்தார். கேள்வி கேட்ட செய்தி யாளர்களை ஆய், பூய் என பாட்சா படப்பாணியில் மிரட்டினார். பிறகு இது குறித்து கேட்டதற்கு சமூக விரோதிகள் போராட்டக் களத்தில் புகுந்ததை பற்றி  தனக்கு எதுவும் தெரியாது என்றும்  பேசிக் கொண்டதைத்தான் தெரிவித் தேன் என்றும் பம்மினார்.

ஆனால் பேட்டி கொடுத்த போது, அவர் காட்டிய ஆவே சத்தையும் அவர் வெளிப்படுத்திய ஆத்தி ரத்தை தமிழகம் மறந்துவிடவில்லை. நான் ஒரு தடவை சொன்னால் நூறு  தடவை சொன்னது மாதிரி என்று பாட்சா  படத்தில் வசனம் பேசியவர் ஒருமுறை சொன்னால் போதும். தமிழக மக்கள் என்னை மன்னித்து விட வேண்டும் என்று. இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினிகாந்த் போன்ற பிரபலம் ஒரு கருத்தை தெரி விக்கும் போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும், பிரபலங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவ ரது தலையில் ஓங்கி குட்டியுள்ளது. இந்த அறிக்கைக்கு பிறகு கூட ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை, மன்  னிப்புக் கேட்கவும் இல்லை. இந்த பிரச்ச னையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கள்ள மவுனம் காத்து வருகிறார். தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்ததையே டி.வியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அப்போது கூறினார். ஆனால் அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனுக்குடன் அனைத்து தகவல்களையும், முதல்வர் எடப்பாடிக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தேன் என ஆணையத்தில் வாக்கு மூலம் அளித்திருக்கிறார். இதை எடப் பாடி பழனிசாமி மறுக்கவில்லை. ஒன்று தனக்கு தெரியும் என கூற வேண்டும், அல்லது கிரிஜா சொல்வது தப்பு என்று  கூறவேண்டும். எதுவும் கூறாமல் ஓ.பி.எஸ் அணியுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பதால் தமிழக மக் களை ஏமாற்ற முடியாது.