cinema

img

சகிக்க முடியாத அளவு ஆணாதிக்கம்!

காவாலா பாட்டுக்கு ஆடிய நடிகை தமன்னா கொஞ்சம் வித்தியாசமானவர்.  அவர் பேசும் போது, தென்னிந்திய சினிமாவில், சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அவை எளிதானவை. சில கமர்சியல் படங்களில், எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குநர்களிடம் அதைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தைக் கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்யத் தொடங்கினேன். தென்னிந்திய சினிமாவில் கிடைத்த வெற்றி இந்தியில் எனக்கு கிடைக்கவில்லையே என்று கேட்கிறார்கள். அதை தனிப்பட்ட தோல்வியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு படம் பலரின் பங்களிப்புடன் உருவாகிறது. அந்த வகையில் எனது வெற்றி, தோல்வி இரண்டில் இருந்தும் விலகி இருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 17 வருடங்களுக்குப் பிறகும் ஒவ்வொரு நாளும் கேமராவை எதிர்கொள்ளும் ஆசையுடன் எழுகிறேன். நடிப்பது எனது விருப்பம். அது என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.