மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துவருபவர் பிரபல திரைக்கலைஞர் ரம்யா நம்பீசன். ஒரு குழந்தை நட்சத்திரமாக சயனம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமான அவர் அம்மொழியில் பல படங்களில் நடித்துப் பிரபலமானார். ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, குள்ளநரிக் கூட்டம், பீட்சா போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார். சிறந்த பாடகி யாகவும் இருக்கும் ரம்யா ‘சரி கமப’ நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார். திரைப்பட வாய்ப்பு களுக்காக பெண் கலைஞர்கள் ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ என்கிற பாலியல் ரீதியிலான கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது இப்போதும் தொடர்வதாகக் கூறும் ரம்யா நம்பீசன், அதனைப் பெண் கலைஞர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். பொதுவெளியில் அதைப் பேசவேண்டும், அதுமட்டுமன்றி, அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைப்பவர்களிடம் எதுபற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையில் இருந்தபடி ‘முடியாது’ - என்று திட்டவட்டமாக மறுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.