cinema

img

வந்துவிட்டது திரைக்கதைக்கும் ஒரு வங்கி... - சோழ. நாகராஜன்

இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கோ. தனஞ்செயன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, திரைக்கதையாசிரியர் கருந்தேள் ராஜேஷ் ஆகியோர் இணைந்து திரைக்கதை வங்கி ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஸ்கிரிப்டிக் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் திரைக்கதை வங்கியை இயக்குநர் பாரதிராஜா தொடங்கிவைத்தார். இந்த வங்கியில் திறமையான எழுத்தாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைகளைப் பெற்று, சேமித்து, அவற்றைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நல்ல திரைக்கதையைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த வங்கி பெரிதும் உதவும் என்று கோ. தனஞ்செயன் கூறினார். இந்தியாவிலேயே இப்படியொரு ஸ்கிரிப்டிக் வங்கி என்பது இதுவே முதல் முயற்சியாம்.