சென்னை
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திய பின்பு தமிழக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பூசியின் நலன் குறித்து பேட்டி அளித்தார்.
நேற்று முழுவதும் நன்றாக இருந்த நடிகர் விவேக்கிற்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் எனற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடக்கத்தில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிலைமை மோசமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்ட சிகிச்சை கருவியான எக்மோ பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.