தர்மமென்பார் நீதியென்பார்
தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச்
சந்தியிலே எறிந்துவிட்டுச்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார்
பிரமனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
இந்தத்-
திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் - இந்த (திண்ணை)
பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்;
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
(பதிபக்தி, 1958)
மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பிறந்த நாள்