தில்லி
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகரான விவேக் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் (ஏப்ரல் 15-ஆம் தேதி) கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் .தடுப்பூசி செலுத்திய பின்பு தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்னன் உடன் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது நான் நலமாக உள்ளேன் என கூறினார்.
வீட்டிற்கு வந்த சில மணிநேரங்களில் மாரடைப்பு காணரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனளிக்காமல் ஏப்ரல் 17-ஆம் தேதி உயிரிழந்தார். விவேக் மரணத்திற்கு காரணம் தடுப்பூசி தான் காரணம் என தகவல் தீயாய் பரவ ஒன்றிய சுகாதாரத் துறை இந்த விவகாரத்தை ஆய்வு செய்தது.
இந்நிலையில், இன்று (அக்., 22) ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் நடிகர் விவேக் இதய அடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.