cinema

img

கொஞ்சம் ஓவராத்தான் இருக்குமோ... - சோழ. நாகராஜன்

ஆக்சன் காட்சிகளைப் படமாக்கும்போதெல்லாம் நான் மிகவும் ஆர்வமாகவே இருப்பேன். அந்தக் காட்சிகளைப் படத்தில் பார்த்தபோதுதான் இயக்குநர் விநோத்தின் விசாலமான (?) பார்வை எனக்குப் புரிந்தது. இப்படியான ஆக்சன் காட்சிகளை நாம் இதுவரையில் எந்தப் படத்திலும் பார்த்திருக்க முடியாது. - இப்படிச் சொல்லியிருக்கிறார் வெளிவர இருக்கும் அஜித் நடித்த வலிமை படத்தின் நாயகி ஹியூமா குரேஷி. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. குரேஷி சொல்லியிருப்பதைப் பார்த்தால் ரத்த விளாராக மனிதர்களை ஆக்கும் வன்முறைக் காட்சிகள் கொஞ்சம் ஓவராத்தான் இருக்குமோ?