cinema

img

என்ன சொல்ல வருகிறது எஃப்.ஐ.ஆர்..? - சோழ. நாகராஜன்

ராட்சசன் படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்து வெளிவர இருக்கும் படம்தான் எஃப்.ஐ.ஆர். இந்தப் படமும் ராட்சசன்போலவே திரில்லர் வகையைச் சேர்ந்ததுதானாம். மிகவும் கடுமையாக உழைத்து, மெனக்கெட்டு இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம் விஷ்ணு. மனு ஆனந்த் இயக்கி யுள்ள இந்தப் படத்தை விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் எனும் அவரது சொந்த நிறுவனமே தயாரித்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் அப்பாவி இஸ்லாமியர்கள்மீது தீவிரவாதச் சாயம் பூசுவதை விமர்சிக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் தீம் பாடலை சிம்பு பாடியுள்ளார்.