cinema

img

ஜனவரி 13ல் வெளியாகிறது விஜயின் மாஸ்டர்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநகரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமியை  நடிகர் விஜய் நேற்று (திங்கள்கிழமை)  சந்தித்து, திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

;