cinema

img

தமிழில் தி கிரேட் இந்தியன் கிச்சன்...

மலையாளத்தில் வெளி யாகி இந்திய அளவிலும் உலக அளவிலும் பாராட்டப்பட்ட தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தைத் தமிழில் தயாரித்திருக்கிறார்கள். ஜியோ பேபி மலையாளத்தில் இயக்கியிருந்த இந்தப் படத்தைத் தமிழில் ஆர். கண்ணன் இயக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் நடிக்கும் இந்தப் படத்தின் முதல்  பார்வையை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். இதனைத் தனது வலைப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. இந்தியச் சமையலறைகளும் வீடும் எப்படி பெண்களுக்கு எதிரான கொடுமை யான அமைப்பாக உள்ளதென்பதை வெகு இயல்பாக உலகின்முன் வைத்த அற்புதமான படம்தான் இந்த இந்தியன் கிச்சன். தமிழிலும் நல்ல வரவேற்பையும் கவனத்தையும் பெறுமென்றே நம்புவோம்.