விஜய் சேதுபதி, சூரி மற்றும் பலர் நடிக்கும் “விடுதலை” படத்தின் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. முதல் பாகத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன. படத்தில் வரும் காட்சிக்காக ரயில் மற்றும் ரயில்வே பாலம் செட் போடப்பட்டுள்ளதாம். அதற்கான செலவு மட்டும் 10 கோடியாம். படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் பல்கேரிய நாட்டின் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்கிறார்களாம். தமிழ் சினிமா எங்கேயோதான் போகுது!