cinema

img

திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி... மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பிறந்த நாள்....

தர்மமென்பார் நீதியென்பார்
தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச்
சந்தியிலே எறிந்துவிட்டுச்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார்
பிரமனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
இந்தத்-
திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் - இந்த (திண்ணை)
பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்;
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
(பதிபக்தி, 1958)

மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பிறந்த நாள்

;