ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் ஒரு புதுப்பட த்திற்கான அறிவிப்பு வந்துள்ளது. நாயகி அதிதி ராவ். இயக்குநர் கிஷோர் பி. பெலேகர் இயக்கும் காந்தி டாக்ஸ் என்பதுதான் அந்தப் படத்தின் பெயர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. இதில் புதிய செய்தி என்னவென்றால் இந்தப் படம் முழுக்க முழுக்க வசனமே இல்லாத மௌனப் படமாம். கடந்த கால மௌனப் பட சகாப்தத்தின் பேரனுபவத்தை இன்றைய ரசிகர்களுக்கு வழங்குவதே படக் குழுவின் நோக்கம் என்கிறார்கள். மேலும் இசை என்பதே உலக மொழி என்கிறார்கள். மௌனப் படம் என்பது வித்தை காட்டும் நிகழ்வல்ல. வசனமே இல்லாது உணர்வுகளை நடிப்பால்மட்டும் வெளிப்படுத்துவது சவால்கள் நிறைந்த கடினமான செயலாகும் என்றார் இயக்குநர்.