நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்த நிலையில் ஜேக் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அயலான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் பெற்ற 5 கோடி கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்து மொத்தம் 6 கோடியே 92 லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டியிருப்பதாகவும், அந்த பணத்தை தராமல் அயலான் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயலான் படத்தை ஜனவரி 3ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.