cinema

img

கோப்ரா படத்தின் பாடல்கள் வெளியானது!

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா.

எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்நிலையில் தற்போது பாடல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. பா.விஜய், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.