சென்னை, செப்.11- ஸ்ரீ சிவக்குமார் கல்வி மற்றும் அறக்கட்டளை, அகரம் பவுண் டேஷன் நடத்தும் 43ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடை பெற்றது. அகரம் பவுண்டேஷனில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் ஓவியர் ராமுவும் கவுரவிக்கப்பட்டார். பின்னர் பேசிய நடிகர் கார்த்திக், சிறிய வயது முதல் எங்களுக்குள் நல்ல சிந்தனையை வளர்த்தவர் எங்கள் தந்தை என்றார். பணம் மகிழ்ச்சி தராது என சொல்வார்கள் அது பொய். நம்மிடம் இருக்கும் பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்தால் அது மகிழ்ச்சியைதரும். உடல் உறுப்பு தானம் பற்றி எனக்கும் பெரிய தயக்கம் இருந்தது. அதை இங்கு மேடையில் பேசிய ஒரு தம்பி உடைத்து விட்டான். கல்வி என்பது நமது வாழ்கைக்கு தேவையான சிந்தனையை உருவாக்குகிறது. கற்பித்தல், கற்றல் என்பது அறிவு என்ற நிலை இருந்தால் இங்கு எல்லாமே மாறும். ஆனால் நமது சமுதாயத்தில் மதிப் பெண்கள் தான் எல்லாமே என்ற நிலை இருக்கிறது. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு 100 மதிப்பெண்கள் வாங்குவது பெரிதல்ல.
விளக்கு வெளிச்சம் இல்லாத ஒரு மாணவன் 50 மதிப்பெண் வாங்குவதுதான் பெரிது. 4,000 குடும்பங்களுக்கு அதிகபட்சம் 10,000 என்ற அளவில் சூர்யாவின் சொந்த பணத்தில் 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கூரை இல்லாத வீட்டில் கூட மனிதம் நிறைய இருக்கிறது. அகரம் 1,500 மாணவர்களுக்கு தனியாக உணவுடன் தங்கும் விடுதி வசதி வழங்கி வருகிறது. நகரத்திற்கு வருவது நரகமாகமாறி அங்கிருந்து அரசு பள்ளியில் படித்து இங்கு வந்து சாதனை புரிந்து கொண்டி ருக்கிறார்கள். சாதி பிரச்சனை கிராமங்களில் இன்றும் தொடர்கிறது. பள்ளி வரைக்கும் போதை பழக்கம் வந்து விட்டது மிகுந்த வேதனை யளிக்கிறது. என்ன பெயர் என்று தெரியாமல் கூட விற்பனை செய்கிறார்கள்.பிரச்சனை களை சந்திக்க முடியாமல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடு கிறார்கள். மது குடித்தாலோ, சிகரெட் பிடித்தாலோ வாசம் வரும் ஆனால் போதை பொருள் அப்படியில்லை. எனவே அதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கார்த்திக் கேட்டுக் கொண்டார். பின்னர் பேசிய நடிகர் சிவக்குமார், கல்வி ஒழுக்கம் இந்த இரண்டும் இருந்தால் போதும் உலகத்தில் உச்சம் தொட முடியும். அப்துல்கலாம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம் என கூறிய அவர், மாண வர்கள் ஒழுக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.