cinema

img

சென்னையில் ஒரு சினிமா அருங்காட்சியகம்... - சோழ. நாகராஜன்

ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தின் சார்பில் திரைப்பட அருங்காட்சியகம் ஒன்றைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்திருக்கிறார். ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த சினிமா பாரம்பரிய அருங்காட்சியகத்தில் அந்த நாளில் திரைத்துறையினர் பயன்படுத்திய பல பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட காமிராக்கள், எடிட்டிங் உள்ளிட்ட பணிகளில் உபயோகமான கருவிகள், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், நட்சத்திரங்கள் வைத்திருந்த 40 கார்கள், 20 பைக்குகள், இன்னும் பலநூறு விதமான கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இப்படியான தொரு அருங்காட்சி யகத்தைப் பொதுமக்கள் பார்வையிட காலை 10 மணி  முதல் மாலை 5 மணி வரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பெரியவர் களுக்கு ரூபாய் 200, சிறியவர்களுக்கு ரூபாய் 150 கட்டணமாக வசூலிக்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நல்லதொரு கலை முயற்சிதான் ஆனால், இந்தக் கட்டணம்தான் ரொம்ப அதிகமா தெரியுது, இல்லையா?