தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக ரூ.80 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,970க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை உயரும் போது ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது. ஆனால் குறையும் போது மிகச் சிறிய அளவிலேயே குறைவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கு விற்பனையாகிறது
