பிரபல செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்-யின் (IANS) 50.5% பங்குகளை அதானி நிறுவனம் வாங்கியுள்ளது.
அதானிக்கு சொந்தமான AMG Media Networks Ltd (AMNL) என்ற நிறுவனம், செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்-யின் (IANS) 50.5% பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் IANS இன் அனைத்து செயல்பாடுகளும், குறிப்பாக நிர்வாகக் கட்டுப்பாடுகள் மற்றும் இயக்குநர்கள் நியமனம் ஆகியவை AMNL வசம் வந்திருக்கிறது. 2022-23 நிதியாண்டில் IANS ரூ.11.86 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என்.டி.டி.வி-யின் 65% பங்குகளை அதானியின் AMNL நிறுவனம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.