business

img

2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது! - ஆர்.பி.ஐ

கடந்த ஜூன் 30 வரை, 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. அதன்படி, வங்கிக் கிளைகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி, சில்லறையாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 30 வரை ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இது மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவிகிதமாகும் என்றும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.