உணவை ஆர்டர் செய்து பெறுவோருக்கு சிக்கல்!
புதுதில்லி, செப். 15 - ஸ்விக்கி - ஜொமேட்டோ (Swiggy, Zomato) போன்ற நிறுவனங்களின் பில் முறைகள், ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக இந்த நிறுவனங் கள் விநியோகம் செய்யும் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இணையதள வர்த்தக நிறுவனங் களுக்கு ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி முறை உள்ளது. ஸ்விக்கி - ஜொமே ட்டோ போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் இணைய தள வர்த்தக ரீதியாகத்தான் இந்த பணி களை செய்கின்றன. எனவே, அதன டிப்படையில் இந்த நிறுவனங்களை யும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர கவுன்சில் முடிவு செய்துள்ளது. வியாழனன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரி கிறது.
ஹோட்டல்களில் உணவுப் பொருட் களை வாங்கும்போது, ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், புதிய திட்டத்தின் மூலம் ஹோட்டலுக்கும் வரி செலுத்தி விட்டு அதனை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கும் வரி செலுத்த வேண்டிய- அதாவது ஒரு உணவுக்கு இரட்டை வரியை செலுத்த வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட லாம் என்று கூறப்படுகிறது. இதனை தவிர்க்க, ஸ்விக்கி - ஜொமேட்டோ போன்ற நிறுவனங்களுக்கு உணவு விநியோகம் செய்வதை ஹோட்டல் நிறுவனங்கள் தனிக்கணக்காக வைத்துக் கொள்வதுடன், உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களும், தங்களின் பில் முறைகளை கையாளும் சாப்ட்வேர் களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்து ரை செய்யும் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும், உணவு விநியோக நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க இருப்பதால் உண வுப் பொருட்கள் விலை உயர்வது மட்டும் உறுதியாகி இருக்கிறது.