business

img

கலால் வரியில் கொள்ளை வருவாய் ஈட்டி மோடி அரசு சாதனை.... கொரோனா பொதுமுடக்கத்தால் எரிபொருள் நுகர்வு குறைந்தும் ‘வசூலில்’ பாதிப்பு இல்லை...

புதுதில்லி:
பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் கலால் வரி (Central Excise Duty) ‘வசூலில்’ மோடி அரசு சாதனை படைத்துள்ளது.மத்திய கணக்குக் கட்டுப்பாட்டு தலைமை ஆணையரின் அறிக்கையின்படி (Controller General of Accounts - CGA), கடந்த 2020 ஏப்ரல் முதல் நவம்பர்வரையிலான 8 மாத காலத்தில், கலால் வரிவசூலானது ரூ. 1 லட்சத்து 96 ஆயிரத்து 342 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2019 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலானகாலகட்டத்தில் இதே கலால் வரி வசூல்,ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 899 கோடியாகமட்டுமே இருந்த நிலையில், அது நடப்பாண்டின் 8 மாத காலத்தில் சுமார் 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், இது ஒரு ‘சாதனை(?)’ என்றும் கூறப்படுகிறது.இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம், இந்த 8 மாத காலகட்டத்தில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பெட்ரோல் - டீசல் பயன்பாடு வழக்கத்தைவிட சுமார் 10 மில்லியன் டன் குறைந்தது.மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் கீழுள்ள பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும்பகுப்பாய்வு கழக (Petroleum Planning and Analysis Cell - PPAC) தரவுகள்படி, முந்தைய 2019 ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில், டீசல் நுகர்வானது 55.4 மில்லியன் டன்களாக இருந்துள்ளது. ஆனால்2020-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 44.9 மில்லியன் டன்கள் அளவிற்கே டீசல்நுகரப்பட்டுள்ளது.பெட்ரோல் நுகர்வை எடுத்துக் கொண்டாலும் ஏப்ரல் - நவம்பர் 2019 காலகட்டத்தில்20.4 மில்லியன் டன்களாக இருந்தது, 2020ஆம் ஆண்டின் அதே 8 மாதங்களில் 17.4 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது.

அப்படியிருந்தும், 2019 ஏப்ரல் - நவம்பர்காலகட்டத்தைக் காட்டிலும் 2020 ஏப்ரல் - நவம்பரில், 48 சதவிகிதம் கூடுதலாக கலால்வரி வசூலித்து, மோடி அரசு ‘சாதனை’ படைத்துள்ளது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்விலையானது, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 50 டாலருக்கும் கீழேகுறைந்தது. கொரோனா பொதுமுடக்கத் தின் போது 14 டாலர் வரை வீழ்ச்சி அடைந்தது. அப்படியிருந்தும் இந்தியாவில் மட்டும்பெட்ரோல் - டீசல் விலைகள் குறைக்கப் படவில்லை.

சர்வதேச சந்தையில் எந்தளவிற்கு விலை குறைகிறதோ, அதை ஈடுகட்டும் வகையில் மோடி அரசு மேலும் மேலும்கலால் வரிகளை உயர்த்தி, இந்தியாவில் சில்லரை பெட்ரோல் - டீசல் விற்பனையில் விலை குறையாமல் பார்த்துக் கொண்டது.தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 ரூபாய் 70 காசுகளாகவும், டீசல்74 ரூபாய் 88 காசுகளாகவும் இருக்கும் நிலையில், இதில், பெட்ரோல் மீதான கலால் வரிமட்டும் லிட்டருக்கு 32 ரூபாய் 98 காசுகள், டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு 31 ரூபாய்83 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2014-ஆம் ஆண்டு, பிரதமர் மோடிதலைமையிலான பாஜக அரசு முதன்முறையாக பதவியேற்ற பிறகு பெட்ரோல் மீதானகலால் வரி 9 ரூபாய் 48 காசுகளாகவும், டீசல் மீதான வரி விகிதம் லிட்டருக்கு 3 ரூபாய்56 காசுகளாகவும் இருந்தது. அதன்பின்னர், கடந்த நவம்பர் 2014 மற்றும் ஜனவரி 2016 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 9 முறை பெட்ரோல், டீசல்மீதான வரி விகிதம் உயர்த்தப்பட்டது.

இதனால், 15 மாதங்களில் பெட்ரோல் மீதான வரிவிகிதம் லிட்டருக்கு 11.77 ரூபாயாகவும், இதேடீசலுக்கு 13.47 ரூபாயாகவும் அதிகரித்தது. இதனால் கடந்த 2014-15 நிதியாண்டில்வெறும் 99 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தவரி வசூலானது, 2016-17 நிதியாண்டில், இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இடையே 2017 அக்டோபரில் கலால் வரியில் 2 ரூபாயும், அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 1.50 ரூபாயும் மோடி அரசு குறைத்தாலும், மீண்டும் ஜூலை 2019-இல் தலா 2 ரூபாய் அதிகரித்தது. 

2020 மார்ச்சில் கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. மே மாதத்தில்,பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான வரியை 13 ரூபாயும் உயர்த்தியது. கச்சா எண்ணெய் மீதான அடிப்படைகலால் வரி இவ்வளவுதான் என்று இல்லாவிட்டாலும், சுமார் 11 சதவிகிதமாக இருக்கலாம் என்றும், இயற்கை எரிவாயு மீதான வரிவிகிதம் சுமார் 14 சதவிகிதமாக இருக்கலாம்என்று கூறப்படுகிறது. இதற்கு மேல் அவ் வப்போது கலால் வரியை மத்திய அரசு கூட்டுவது நடக்கிறது.ஆனால், எந்த வகையில் பார்த்தாலும்,பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் மூன்றில் இரண்டு பங்கு,மத்திய - மாநில அரசுகளுக்கு வரியாகவேபோகிறது என்பதுதான் இதிலுள்ள உண்மையாகும். இவ்வாறு கொள்ளை வசூல் அடிப்பதில்தான், 2020 ஆம் ஆண்டில் மோடி அரசு‘சாதனை’யும் படைத்துள்ளது.2020 ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் ஒட்டுமொத்தமாக அரசின் வரி வருவாய் 45.5 சதவிகிதம் குறைந்துள்ள நேரத்தில், கலால் வரி வருவாய் மட்டும் 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2020 - 21 நிதியாண்டில் பெட்ரோலுக்கு 39 சதவிகிதமும், டீசலுக்கு 42.5 சதவிகிதமும் மத்திய கலால் வரியை மோடி அரசு அதிகரித்துள்ளது.