business

img

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைவு

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.51.50 குறைந்து ரூ.1,738 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் (19 கிலோ எடை) விலை ரூ.51.50 குறைந்து ரூ.1,738 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (01-09-25) முதல் அமலாகிறது.

அதுபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றமின்றி, ரூ.868.50 ஆக தொடர்கிறது.