புதுதில்லி:
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, சீனாவில் தனது வணிகத்தை எப்போதும் போல தொடரப் போவதாக அறிவித்துள்ளது.சீனா தங்களது முக்கியசந்தை என்பதால், சீனாவுடனான வர்த்தகம் வலுவான முறையில் தொடரும் என்று பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார். உலகின் தொழிற்சாலை என்றழைக்கப்படும் சீனாவில் அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களின் ஆலைகளும் உள்ளன. இந்தியாவின் பஜாஜ் ஆட்டோவும் சீனாவில் தனது வணிகத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், “சீனாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்ய வேண்டும்” என்று அண்மையில் பேட்டி ஒன்றில் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.“நாங்கள் சீனாவுடன் தொடர்ந்து வணிகம் செய்வோம்;ஏனெனில் இவ்வளவு பெரியநாட்டை விடுத்து, இவ்வளவு பெரிய சந்தையை விட்டுவிட்டு,நாங்கள் வணிகம் செய்தால், அது முழுமையான வணிகமாகஇருக்காது. சீன சந்தையை இழந்தால், நாம் ஏழைகளாக இருப் போம்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மற்றும்ஜூலை மாதங்களில் சீன இறக்குமதியை கடுமையாக்கியபோது என்ன நடந்தது என்பதை அந்தப்பேட்டியில் நினைவு கூர்ந்துள்ள ராஜீவ் பஜாஜ், “இதுபோன்ற ஒரு செயல் நாமே நமது மூக்கினை வெட்டுவது போல் ஆகும்.போட்டி அதிகரித்தால்தான் விலை குறையும். சீனாவில் இருந்து தயாரிப்பது மலிவானது;ஏன், சில சமயங்களில் தாய் லாந்தில் இருந்து வாங்குவதும் கூட மலிவாக இருக்கலாம்; அதை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றும் தெரிவித் துள்ளார்.