விப்ரோ நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ரிஷாத் ப்ரேம்ஜி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே கூடுதல் வருமானத்திற்காக மற்றொரு நிறுவனத்திற்குப் பணியாற்றும் நடைமுறையை மூன்லைட்டிங் (Moonlighting) என்று கூறப்படுகிறது. ஸ்விக்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் மூன்லைட்டிங் நடைமுறைக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், அகில இந்திய மேலாண்மை சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ரிஷாத் ப்ரேம்ஜி, பணி நியமன ஆணையில் குறிப்பிட்டு இருக்கும் விதிமுறைகளில் மீறி விப்ரோ நிறுவனத்தில் பணியில் இருக்கும் போதே மற்றொரு நிறுவனத்திற்குப் பணியாற்றிய 300 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.