ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்து ரூ.86,160க்கு விற்பனையாவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி ரூ.85,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் 2ஆவது முறையாக சவரனுக்கு ரூ.560 உயர்ந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,160க்கும், கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,770க்கும் விற்பனையாகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1040 உயர்ந்துள்ளது.