business

img

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் நியமனம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்முவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய துணை ஆளுநர் ராஜேஷ்வர் ராவ்-இன் பதவி காலம் அக்டோபர் 8-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஷிரிஷ் சந்திர முர்மு, தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அக்டோபர் 9-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். அடுத்த 3 ஆண்டுகாளுக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிக்க உள்ளார்.