பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு 1.10 கோடி ரூபாய் அபராதம் விதித்தது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ).
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் மீது தொடர்ச்சியாக புகார்களும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமானங்களில் பாதுகாப்பு மீறல்கள் குறித்து விமான ஊழியர் ஒருவர், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் புகார் அளித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விசாரணையின்போது, ஏர் இந்தியா நிறுவனம் ஒத்துழைக்காததால் அந்நிறுவனத்திற்கு டிஜிசிஏ சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை விதிகளுக்கு ஏற்றதாக இல்லை என்றும், தொலைதூர வழித்தடங்களில் இயக்கப்படும் சில விமானங்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும் ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.