business

img

பெட்ரோல் விலை லிட்டர் 91 ரூபாயை தொட்டது... தேர்தல்கள் முடிந்ததால் மக்கள் மீது தாக்குதல்

போபால்:
கடந்த 2 வாரங்களாகவே, பெட் ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்பெட்ரோல் விலை லிட்டர் 91 ரூபாயைத்தொட்டுள்ளது.

கொரோனா தொற்று பொதுமுடக் கக் காலத்தில், கடந்த பிப்ரவரி, மார்ச்,ஏப்ரல், மே மாதங்களில், கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழே சரிந்தது.அப்போதும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படவில்லை. மாறாக, மத்திய, மாநில அரசுகள் அதிகப்படியான வரியைப் போட்டு, கச்சா எண்ணெய் விலைக் குறைவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கஜானாவை நிரப்பிக் கொண்டன.இதன்பின்னர், ஜூன் மாதம் சர்வதேச சந்தையிலேயே கச்சா எண்ணெய்விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. 85 ரூபாய்க்கு மேல் பெட்ரோல்விலை சென்றது. எதிர்க்கட்சிகள் அப்போது ஆவேசமிக்க போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

அக்டோபர் மாதத்தில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, அரசேபெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தவில்லை.ஆனால், பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தற்போது பெட்ரோல்விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் பெட்ரோல் விலை 85 ரூபாய் 31 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 84 காசுகளுக்கும் உயர்ந்துள்ளது. ஆனால்,மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாய் 05 காசுகளையும், டீசல் விலை 80 ரூபாய் 10 காசுகளையும் எட்டியுள்ளது. நாட்டிலேயே குறைந்தபட்சமாக சண்டிகரில் 79 ரூபாய் 28 காசுகளுக்கு பெட்ரோல் விற்பனையாகிறது. 

;