பாதுகாப்பான நடைபாதைகள் வழிகாட்டுதல்களை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு
புதுதில்லி, ஆக. 2- பாதுகாப்பான நடைபாதைகளுக்கான வழிகாட்டு தல்களை 4 வாரங்களுக்குள் உருவாக்க ஒன்றிய அர சுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது. சாலை விபத்தை தடுக்கும் ஒரு பகுதியாக பாதுகாப்பான நடைபாதைகள் உருவாக்க கோரும் மனுவை உச்சநீதி மன்ற நீதிபதி ஜே.பி. பர்தி வாலா அமர்வு விசாரித்து வரு கிறது. வெள்ளிக்கிழமை அன்று இந்த மனு மீண்டும் விசார ணைக்கு வந்த நிலையில், பாதுகாப்பான நடைபாதைகள் உருவாக்கப்பட்டதும் கண்கா ணிப்பு, நடைமுறைப் படுத்துதல் தொடங்கும் என ஒன்றிய அரசு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜே.பி. பர்தி வாலா, “பாதசாரிகளுக்கான நடைபாதைகளுக்கான வழி காட்டுதல்களை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் நடவ டிக்கைக்கு காத்திருக்கிறோம். பாதுகாப்பான நடைபாதை கள் வழிகாட்டுதல்களை உருவாக்க ஒன்றிய அரசுக்கு 4 வாரம் கெடு விதிக்கப்படுகிறது. இது இறுதி கெடு ஆகும்” என உத்தரவிட்டார்.