articles

img

மாதர் சங்க மூத்த தலைவர் மாதம்மாள் காலமானார்

மாதர் சங்க மூத்த தலைவர் மாதம்மாள் காலமானார்

சேலம், ஆக. 9 -  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மாநிலக் குழு அலுவலக முன்னாள் செய லாளரும், நீண்ட காலம் இயக்கப் பணியில் ஈடுபட்ட மூத்த தோழருமான மாதம் மாள் சனிக்கிழமை காலமானார்.

அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கருமலைக் கூடல் பகுதியில் பிறந்து வளர்ந்த மாதம்மாள், 1980களில் பொதுவுடமை இயக்கத்திலும் மாதர் சங்கத்திலும் தனது பொது வாழ்க்கையைத் தொ டங்கினார். புலவர் படிப்பை முடித்த பின்னர் சேலத்தில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மேட்டூர் தாலுக்கா நிர்வாகியாகவும், சேலம் மாவட்ட நிர்வாகியாகவும் திறம்பட செயல் பட்டார். மறைந்த மூத்த தலைவரும் மாதர் சங்கத்தின் முன்னோடி தலைவருமான கிருஷ்ணம்மாள் அவர்களின் வீட்டில் ஐந்து ஆண்டுகள் தங்கி இருந்து, அவர்களைப் பார்த் துக் கொண்டதுடன் மாதர் சங்கப் பணிகளை யும் முன்னெடுத்தார்.

மாநில அலுவலக செயலாளர்

1985-ல் மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலை வர் பாப்பா உமாநாத் அவர்களால் அடையாளம் காணப்பட்டு, மாநில மையத்திற்கு கொண்டு வரப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு மேல் மாநில மையத்தில் அலுவலகச் செயலாளராக திறம்பட பணியாற்றினார். மொபைல் போன் இல்லாத அந்தக் காலத்தில், கடிதப் போக்குவரத்து மற்றும் தொலைபேசி மூலம் அனைத்து மாவட்டங்களுடனும் தகவல் தொடர்பு மேற்கொண்டார். எப்போதும் கையில் கடிதம் எழுத பேனாவுடனும் 25 பைசா கார்டுகளு டனும் இருப்பார். ஆவணங்களை பராமரித்தல், பாதுகாத்தல் என அனைத்தையும் திறம்படச் செய்தார். சேப்பாக்கம் மசூதி தெருவில் இருக் கும் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள வீட்டில் ஒரு சிறிய அறை எடுத்து குடியிருந்தார். தூங்குவ தற்கு மட்டும்தான் அந்த அறைக்கு செல்வார். நாள் முழுக்க அலுவலகம்தான் அவருடைய வீடு. பொது வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் என்று திருமணம் செய்து கொள்ளாமல் தன்  வாழ்க்கையை இயக்கத்திற்காக அர்ப்பணித் துக் கொண்டார். அதிகம் பேச மாட்டார். கையெ ழுத்து அச்சடித்தது போல் இருக்கும். பத்திரிகை களை ஆழ்ந்து படித்து, கேள்விகளைக் கேட்டு விவரம் தெரிந்து கொண்டு தன்னை தரம் உயர்த்துவதில் முனைப்பாக இருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருடைய சொந்த ஊரான கருமலைக்கூடலில் தங்கை யின் பாதுகாப்பில் வசித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், அவரைப் பார்க்கச் செல்லும் மாதர் சங்க சகோதரிகளிடம் மகளிர் சிந்தனை விற்பனையைப் பற்றி விசாரிப்பார்.

அஞ்சலி

அவரது மறைவுச் செய்தி அறிந்து, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், செ.முத்துக்கண் ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் உள்ளிட்டோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கருமலைக் கூடல் பகுதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மேட்டூர் ஒன்றி யச் செயலாளர் எஸ்.வசந்தி, மையக்கிளை செயலாளர் பி.தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாதர் சங்கம், உ.வாசுகி இரங்கல்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக மாநி லத் தலைவர் எஸ். வாலண்டினா மற்றும் மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆழ்ந்த இரங்க லை உரித்தாக்கிக் கொண்டுள்ளனர். தோழர் மாதம்மாவின் அர்ப்பணிப்பு மிக்க இயக்க வாழ்க்கையை நினைவு கூர்ந்துள்ள அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, “கடைசி வரை திருமணம் கூட செய்ய மறுத்து, இயக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்ப ணித்துக் கொண்ட தோழர் மாதம்மாவுக்கு என் செவ்வணக்கத்தை செலுத்துகிறேன்” என்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மாதர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அர்ப்பணிப்புக் கும் தியாகத்திற்கும் அடையாளமாய், பாதிக்கப் பட்ட பெண்கள் வரும்போது அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அரவணைப் போடும் அக்கறையோடும் செயல்பட்ட ஒரு மகத்துவமிக்க பொதுவுடமை செயல்பாட்டாள ரை நாம் இழந்திருக்கிறோம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.