articles

தனி நபர் வருமானத்தில் 6 மடங்கு பின்தங்கிய இந்தியா!

தனி நபர் வருமானத்தில் 6 மடங்கு பின்தங்கிய இந்தியா!

முதல் 50 நாடுகள் பட்டியலில் இடமில்லை

துதில்லி, ஜூன் 28 - மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான, தனி நபர் வரு மானத்தில் உலகின் முதல் 50 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இட மில்லை. ஒட்டுமொத்த உலக நாடுகளின் சராசரி தனிநபர் வருமானத்தை விட இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் 6 மடங்கு பின்தங்கியுள்ளது. தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்கும்போது கிடைக்கும் தொகையாகும். இதன் அடிப்படையில் கனடாவைச் சேர்ந்த ‘விஷூவல் கேபிடலிஸ்ட்’ (Visual Capitalist) என்ற இணையதளம், உலக நாடுகளின் சராசரி தனிநபர் வருமா னத்தை பட்டியலிட்டுள்ளது. இதில், ரூ. 1.20 கோடியுடன் லக்சம் பர்க் முதலிடத்தையும், ரூ. 93 லட்சத்து டன் அயர்லாந்து இரண்டாமி டத்தையும், ரூ. 89.87 லட்சத்துடன் சுவிட் சர்லாந்து மூன்றாமிடத்தையும் பிடித் துள்ளன. ரூ.79.59 லட்சத்துடன் சிங்கப் பூர் நான்காமிடத்தைப் பெற்றுள்ளது.  இந்தப் பட்டியலில் ரூ. 76.33 லட்சத்துடன், அமெரிக்கா 7-ஆம் இடத் தையே பெற்றுள்ளது. 50-ஆவது இடம் பிடித்த கிரீஸ் நாட்டின் சராசரி தனி நபர் வருமானம் ரூ. 22 லட்சம். இந்த அடிப்படையில், உலக சராசரி தனிநபர் வருமானம் ரூ. 12 லட்சத்து 15 ஆயிரமாக இருக்கும் நிலை யில், இந்தியாவின் தனி நபர் வருவாய் வெறும் ரூ. 2.12 லட்சமாக உள்ளது. 4 டிரில்லியன் டாலர்களாக இந்திய பொருளாதாரம் உயர்ந்து விட்டதா கவும், இதன்மூலம் ஜப்பானைப் பின்னு க்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் அண்மை யில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் தம்பட்டம் அடித்து வந்தனர். ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான, தனி  நபர் வருமானத்தில், உலகின் முதல் 50 நாடுகள் பட்டியலில் கூட இந்தி யாவிற்கு இடமில்லை என்பது, இந்தி யாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தனிநபர் சராசரி வருமானத்தில், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய மிகச் சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளை விடவும் இந்தியா பின்தங்கி யுள்ளது. இந்தியாவைக் காட்டிலும் அப்படியே 1 மடங்கு (100 சதவிகிதம்) கூடுதலான தனிநபர் சராசரி வரு வாயை வியட்நாம் (4,810 டாலர்), பிலிப் பைன்ஸ் (4,350 டாலர்) நாடுகள் கொண்டிருக்கின்றன.