articles

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 185 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் சிஐடியு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 185 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் சிஐடியு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 17- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்தில் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டு கள் வரை பணிபுரிந்த 185 ஊழியர்களை  பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்தில் பராமரிப்பு பிரிவில் பல ஆண்டு களாக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் ஊழியர்கள், தமிழ்நாடு பணி நிரந்தரச் சட்டம் 1981இன்படி, தாங்கள் பணியில் சேர்ந்து 480 நாள் பணி முடித்த நாள் முதல் நிரந்தரம் செய்திட வேண்டும் என மதுரை, தேனி, விருதுநகர், ராமநா தபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில்  தொழிலாளர் துறை, உதவி ஆணையர்கள் முன்பாக வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட உதவி ஆணையர்கள் முன் நடைபெற்ற பலகட்ட விசாரணை மற்றும் ஆவ ணங்கள் சரிபார்த்தலுக்குப் பின் தற்கா லிக ஊழியர்கள், அவர்கள் பணியில் சேர்ந்து 480 நாள் பணி முடித்த நாள்  முதல் பணிநிரந்தரம் வழங்க வேண்டு மென ஆணையர்கள் உத்தரவிட்டனர். ஆனால் வாரிய நிர்வாகம் இந்த உத்தர விற்கு எதிராகவும், உத்தரவை ரத்து செய்ய வேண்டியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தது. 2017 முதல் 2024 வரை வாரியம் தாக்கல் செய்த வழக்குகள், பலகட்ட விசாரணைக்குப் பின் நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி  முன் இறுதி  விசாரணை முடிவடைந்து தீர்ப்பு  30.04.2025 அன்று ஒத்திவைக்கப்பட் டது. பின்னர் ஜூலை 9 அன்று வாரிய நிர்வாகம், பணி நிரந்தர உத்தரவிற்கு எதிராக தொடுத்திருந்த வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளு படி செய்தது. தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள் வழங்கிய, ஊழி யர்கள் பணியில் சேர்ந்து 480 நாள் பணி முடித்த நாள் முதல் அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை 8 வார காலத்திற்குள் அமல்படுத்த வேண்டு மென்றும் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் பாலன் ஹரிதாஸ், எஸ்.அருணாசலம், செ. ஆஞ்சி, வி.ஆர்.அருண்குமார் ஆகி யோர் ஆஜராகி வாதாடினார்கள். குடி நீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க  மத்திய அமைப்பின் உதவித் தலை வர்கள் வீ. அழகுமலை, ஆர்.சோணை கருப்பையா, மதுரை மாவட்டத் தலை வர் கே.ராமசாமி ஆகியோர் வழக்கு களுக்காக ஆவணங்கள் தயாரிப்பி லும் மற்றும் நீதிமன்ற பணிகளிலும் தொடர்ந்து உதவினர். இந்த தீர்ப்பின் மூலம் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டு கள் வரை தற்காலிகமாக பணி செய்த 185 சிஐடியு ஊழியர்கள் பணி நிரந்தர உத்தரவு பெற்றுள்ளனர். மேற்கண்ட தகவலை குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர் மத்திய அமைப்பின் உதவித் தலைவர் வீ.அழகுமலை தெரிவித்தார்.