articles

img

அவதூறுகளை வீழ்த்தி உறுதியுடன் முன்னேறும் பினராயி அரசு - ஜி.ராமகிருஷ்ணன்

நாடு முழுவதும் எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரசும், பாஜகவும் கேரளத்தில் மட்டும் கை கோர்த்து நிற்கின்றன. முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யவேண்டுமென்று கேரளத்தில் பல பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு,  குற்றப் பத்திரிக்கையும் வழங்கப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆகி வெளியே வந்துள்ள சொப்னா சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து காங்கிரசும், பாஜகவும் போராட்டம் நடத்துகின்றன. கேரளத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ராஜதந்திர வழி களைப் பயன்படுத்தி வெளிநாட்டு கரன்சியையும், தங்கத்தையும் பிரியாணி கொண்டு செல்லும் வாக னங்களில் வெளிநாட்டிற்கு கேரள முதல்வர் கடத்திய தாக சொப்னா சுரேஷ் இப்போது கூறுகிற கட்டுக்கதை யின் அடிப்படையில் இவர்கள் போராடுகிறார்கள். 

2020 ஜூன் மாதம் தூதரகத்திற்கு வரப் பெற்ற பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உயர் புலன் விசாரணை செய்து, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமேன கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார். சுங்கத்துறை, ஒன்றிய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே, ஒன்றிய அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேரள முதல்வர் வலியுறுத்தி னார். கடந்த 2 ஆண்டுகளாக தேசிய புலனாய்வு முகமை, சிபிஐ, அமலாக்கத்துறை, சுங்கத்துறை ஆகிய நிறுவனங்கள் தங்கம் கடத்தல் குறித்து புலனாய்வு செய்தன. அப்போதும் காங்கிரசும், பாஜகவும் முதல மைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், முதல மைச்சர் மீதோ வேறு அமைச்சர் மீதோ குற்றம் சாட்ட எந்த ஆதாரமும் இல்லை என்று முடிவுக்கு வந்த புலனாய்வுத்துறை, சொப்னா சுரேஷ் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. சொப்னா சுரேஷ் பல முறை வாக்குமூலம் கொடுத்த போதும் அதில் முதலமைச்சர் மீது எந்த குற்றச் சாட்டையும் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, முதல மைச்சரை தங்கம் கடத்தல் பிரச்சனையில் ஈடுபடுத்தி வாக்குமூலம் கொடுக்க தன்னை நிர்பந்தப் படுத்துவ தாகவும் சிறையில் இருந்து ஒரு ஆடியோ செய்தியை சொப்னா சுரேஷ் வெளியிட்டார். 

சதித்திட்டம் உருவானது

2021 நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுதலை யான சொப்னா சுரேஷூம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பி.எஸ்.சரித்தும் ஆர்.எஸ்.எஸ் நபர் ஒருவர் இயக்கி வரும் ‘ HIGH RANGE RURAL DEVELOP MENT ’ என்ற  நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தனர். ஆர்.எஸ்.எஸ் நபர் நடத்தும் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு சொப்னா சுரேஷ், திடீரென ஒரு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மேஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த அந்த வாக்குமூலம் சட்டப்படி ரகசியமானது என்றாலும், கூட அதை அவர் ஊடகங்களுக்கும் வெளியிட்டு இருக்கிறார்.  இப்படியாக ஆர்.எஸ்.எஸ் தூண்டுதலால் சொப்னா  சுரேஷ் புனைந்துள்ள கட்டுக்கதையை அடிப்படை யாக வைத்துத்தான், முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, கேரளத்தில் உள்ள பாஜகவும், காங்கிரசும் கைகோர்த்து இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக கலகம் செய்து வருகிறார்கள். கேரளத்தின் ஒரு கணிசமான  பகுதி ஊடகங்கள் சொப்னா சுரேஷின் கட்டுக்கதையை முன்வைத்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வும், இடதுசாரி இயக்கத்திற்கு எதிராகவும் எழுது கின்றனர். 

முதல்வரைத் தாக்க முயற்சி

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள்  திருவனந்தபுரத்திற்கு செல்வதற்கு கண்ணூரில் இருந்து விமானம் மூலம் பயணம் செய்தார். திரு வனந்தப்புரத்தில் விமானம் தரை இறங்கிய பிறகு இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் கூச்சலிட்டவாறே முதல்வரை நோக்கி சென்றிருக்கிறார்கள். விமா னத்தில் முதலமைச்சருக்கு எதிராக அநாகரிமாக நடந்துகொண்ட மேற்படி காங்கிரஸ்காரர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, முதல மைச்சரை தாக்க முயன்ற நபர்களைத் தடுத்த இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளர் இ.பி.ஜெய ராஜன் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் வழக்கு தொடுத்துள்ளார். முதலமைச்சரைத் தாக்க முயன்ற நபர்களின் வன்முறையை நியாயப்படுத்தி வி.டி.சதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மோடி அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது பொய் வழக்கு போடு வதற்கும் அந்த அரசை சீர்குலைப்பதற்கும் முயற்சித்து  வருகிறது. இதே நேரத்தில் தான் நேஷனல் ஹெரால்டு நிறுவனம் சம்மந்தப்பட்ட பிரச்சனையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை மத்திய அமலாக்கத்துறை நேரில் வரவைத்து 3 நாட்கள் விசாரணை செய்தது. ஒரே நேரத்தில், மோடி அரசு இடதுசாரிகளையும் காங்கிரசையும் ஒடுக்க முயற்சிக்கி றது; ஆனால் அதைத் கூட உணராமல், கேரளாவில் உள்ள காங்கிரஸ் பாஜகவோடு கைகோர்த்து, இடது சாரிகளுக்கு எதிராக செயல்படுகிறது. 

ஓராண்டுக்கு முன்னதாக இதைப்போலவே, தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் சம்மந்தப்பட்டிருப்ப தாகவும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஆதாரமும் இல்லாத தால் மத்திய புலனாய்வு நிறுவனங்கள் பினராயி விஜய னுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க இயல வில்லை. இப்பின்னணியில் தான் 2021 நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி  கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2ஆவது முறையாக  ஆட்சிக்கு வந்தது. இத்தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸ்,தற்போது ஆர்.எஸ்.எஸ்-இன் கைப்பாவையாகிவிட்ட சொப்னா சுரேஷ் அளித்த மோசடியான வாக்குமூலத்தை பயன்படுத்தி போராட்டம் நடத்துகின்றனர். கேரளத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிற சந்தர்ப்பவாத நிலைப்பாடு, தேசிய அளவில் அக்கட்சி நம்பகத்தன்மையற்ற நிலை மைக்கு சென்று கொண்டிருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.  மத்தியில் ஆளும் மோடி அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் மீது வழக்குத்தொடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பது நடை முறை ஆகி உள்ளது. மோடி அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகி றார்கள். மேலும், பாஜக அல்லாத மாநில அரசுகளை சீர்குலைப்பதற்கு சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு நிறுவனங்களை ஒன்றிய அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது ஊரறிந்த உண்மை. கேரளத்தில் இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசை சீர்குலைக்க தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மோடி அரசின் ஜனநாயக விரோத சீர்குலைவு வேலையை கேரளத்து மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 

 

;