articles

img

அக்னிபாதை: நாசகரமான நயவஞ்சகமான திட்டம்

ராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந் தெடுக்கும் முறையில் மிகவும் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கும் அக்னிபாதை திட்டம், இளைஞர் கள் மத்தியிலிருந்தும், முன்னாள் ராணுவத்தி னரின் பல்வேறு வகையினரிடமிருந்தும் மிகவும் விரிவான அளவில் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் ஒன்றிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று ராணுவ அதி காரிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் ராணு வத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலரும் கடும் ஆட்சேபணைகளைத் தெரி வித்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் முக்கியமானது, ‘அக்னிவீரர்கள்’ (‘agni veers’) என்று பகட்டு ஆரவாரமாகப் பெய ரிட்டுள்ள இந்த நாசகர நயவஞ்சத் திட்டத்தை இளைஞர்கள் அதிலும் குறிப்பாக கிராமப் புற இளைஞர்கள் மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

குறைந்தகாலத்தில் ஒப்பந்த முறையில் ராணுவத்தினரைத் தெரிவு செய்வது அவர்க ளின் தரத்தையும், செயல் நோக்கத்தையும் பாதித்திடும் என்றும், இவ்வாறு தேர்வு செய் யப்படுபவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே நீண்ட காலத்திற்கு நிரந்தரமான ராணுவ வீரர்களாக மாற்றப்படுவார்கள் என்பது இவர்களுக்கிடையே உள்ளார்ந்த ரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திவிடும் என்றும், நான்கு ஆண்டுகள் கழித்து எவ்வித மான பணிப்பாதுகாப்பும் ஓய்வூதியமும் இன்றி அவர்களை வீதிகளில் தூக்கி எறிவது அவர்களுக்கு நிச்சயமற்ற எதிர்காலத்தை ஏற்படுத்திடும் என்றும் மிகச்சரியாகவே வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்

இந்தத் திட்டத்தை அரசுக்கும் சமூகத் திற்கும் மிகவும் ஆபத்தானதாக மாற்றக் கூடிய விதத்தில் ஆழமான பல அம்சங்கள் இதில் ஒளிந்திருக்கின்றன. அக்னிபாதை திட்டம் ஆட்சியாளர்களால் இந்திய அரசை யும், அதன் நிறுவனங்களையும் இந்துத்துவா சித்திரத்துடன் பொருத்துவதற்கான, அவ்வாறு மாற்றியமைப்பதற்கான பெரிய திட்டம் ஒன்றின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும். இந்துத்துவா ஆட்சியாளர்கள், அரசின் மற்ற அங்கங்களைப்போலவே ராணுவத்தையும் தங்களின் சித்தாந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாற்றிய மைப்பதற்காகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ராணுவப் பயிற்சி பெற்ற பல்லா யிரக்கணக்கான ராணுவ வீரர்கள்  ஒவ்வோ ராண்டும் ராணுவத்திலிருந்து கழற்றிவிடப் பட்டு சமூகத்துடன் இணைவது என்கிற உண்மை ஒருவிதத்தில் இந்து சமூகத்தை ராணுவமயப்படுத்தும் (militarizing Hindu society) சாவர்க்கரின் இலட்சியத்தை நிறை வேற்றுவதற்கான வழியாகும். இதனுடன் சேர்த்து, ராணுவத்தின் உச்ச பட்ச தலைமையான முப்படைத் தளபதி (Chief of Defence Staff-CDS) பதவி நிய மனம் செய்யப்படும் விதமும் பெரிய அளவில் அரசியல்மயமாக்கும் விதத்திற்கு விரிவான வகையில் வழிதிறந்துவிட்டிருக்கிறது. ‘அக்னிபாதை’ திட்டத்தின்கீழ் தேர்வுசெய் யப்படும் ‘அக்னிவீரர்கள்’ எப்படி பயிற்று விக்கப்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் தேசியப் பாதுகாப்பு ஆலோச கரான அஜித் தோவல், “இவ்வாறு தேர்ந் தெடுக்கப்படும் அக்னிவீரர்களிலிருந்து தேச உணர்வுகளைப் பெற்றிருக்கக்கூடிய, தேச நலன்களைப் பாதுகாக்கக்கூடிய சிறந்த பிரஜைகள் உருவாவதை நீங்கள் பார்ப்பீர் கள்,” என்று கூறியிருக்கிறார். அவர்கள் புகுத்தப்போகும் தேசியவாதம் “இந்துத்துவா தேசியவாதமா” என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராணுவத்தில் சேரவேண்டும் என்று துடிப்புடன் இருந்த இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபாவேசத்தை எதிர்கொள்ள முடியாது, அரசாங்கம் அவசரகதியில் சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களில் 10 விழுக்காட்டினருக்கு ஒன்றிய ஆயுதப் படைப் பிரிவுகளிலும், ராணுவ உற்பத்திப் பிரிவுகளி லும், இதர நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு உத்தரவாதப்படுத்தப்படும் என்று அறிவித்தி ருக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு அமைச் சகங்களும் இதேபோன்று உறுதிமொழி களை வாரி வழங்கியிருக்கின்றன. எனினும், இவை எதுவும் கோபாவேசத்துடன் கிளர்ந்தெ ழுந்துள்ள இளைஞர்களைக் குளிர்விக்க வில்லை. ஆட்சியாளர்களின் இத்தகைய உறுதிமொழிகளின் இலட்சணம் என்ன என்பது முன்னாள் வீரர்களுக்கும், இவர்க ளுக்கும் நன்கு தெரியும்.

முன்னாள் ராணுவத்தினருக்கு தற்போது அமலாகியிருக்கும் இடஒதுக்கீடு

ஏற்கனவே ஒன்றிய அரசாங்கத்தின் ‘சி’ பிரிவு பணியிடங்களில் 10 விழுக்காடும், ‘டி’ பிரிவு பணியிடங்களில் 20 விழுக்காடும் முன்னாள் ராணுவத்தினருக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஆனாலும் ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையின் கீழ் உள்ள மீள்குடியேற்ற பொது இயக்ககம் (Directorate Gener al Resettlement) வெளியிட்டுள்ள தரவின் படி, இந்தப் பணியிடங்களுக்கான இட ஒதுக் கீடுகள் எப்போதுமே நிரப்பப்பட்டதில்லை. தற்போது ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள ‘சி’ பிரிவின்கீழ் உள்ள மொத்தப் பணி யிடங்களில், முன்னாள் ராணுவத்தினர் வெறும் 1.29 விழுக்காடு அளவிலும், ‘டி’ பிரிவு பணியிடங்களில்  நாடு முழுதும் உள்ள 77 துறைகளில் வெறும் 2.66 விழுக்காடு அள விலும் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.     

இதேபோன்றேதான் பிறதுறைகளின் நிலையுமாகும். ஒன்றிய துணை ராணுவப் படையில் முன்னாள் ராணுவத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால் 2019 ஜூன் 19ஆம் தேதி வெளியாகியுள்ள கணக்கின்படி இவர்களில் ‘சி‘ பிரிவு பணியிடங்களில் வெறும் 0.47 விழுக் காட்டினரும், ‘பி’ பிரிவு பணியிடங்களில் 0.87 விழுக்காட்டினரும், ‘ஏ’ பிரிவு பணியிடங்க ளில் 2.20 விழுக்காட்டினரும் நியமிக்கப்பட்டி ருக்கிறார்கள். அரசாங்கத்தின் துறைகளில் முன்னாள் ராணுவத்தினர் பணிபுரிவது இவ்வ ளவு பரிதாபகரமாக இருக்கும் இந்த நிலை யில்தான், அக்னிவீரர்களாகத் தேர்ந்தெடுக் கப்பட்டு, பின்னர் வீதிகளில் தூக்கி எறியப் படும்போது அவர்களுக்கு தனியார் துறை களில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்துக் கொண்டி ருக்கிறது. அரசாங்கம் நாட்டிலுள்ள 85 இந்தி யக் கம்பெனிகளைக் கேட்டுக்கொண்டதற்கி ணங்க நாட்டிலுள்ள பெரும் கார்ப்பரேட்டுக ளும் அக்னிபாதை திட்டத்தைப் பாராட்டியி ருக்கிறார்கள். அக்னிபாதை திட்டத்தை வர வேற்று டாட்டா குழுமத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், மஹிந்த்ரா குழுமத்தைச் சேர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா, ஆர்பிஜி குழு மத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, ஜேஎஸ்டபிள்யு குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால் முதலானவர்கள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனந்த் மஹிந்த்ரா தன்னுடைய அறிக்கையில், “அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கமும் திறமைக ளும் அவர்களைச் சிறந்த வேலையாட்க ளாக மாற்றிடும். இத்தகைய பயிற்சி பெற்றோ ரிலிருந்து, திறன்மிக்க இளைஞர்களைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தி ருப்பது, வரவேற்கத்தக்கது,” என்று மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

கார்ப்பரேட் முதலாளிகளின் கரிசனத்துக்கான காரணம்

இந்துத்துவா-கார்ப்பரேட் பேர்வழிகளின் கூட்டணி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தத் திட்டத்தை கார்ப்பரேட் துறை புகழ்ந்து துதிபாடியிருக்கும் விதத்திலிருந்தே, ராணுவம் இப்போது இவர்களின் பெரிய தொழிற்சாலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பயிற்சிப் பள்ளிகளாக மாறியிருப்ப தாகவே தோன்றுகிறது. எனினும், பல்லாயி ரக்கணக்கான முன்னாள் ராணுவத்தின ரும், ராணுவ அதிகாரிகளும் கூறுவதுபோல், எதார்த்த உண்மை என்னவென்றால், கார்ப்பரேட்டுகள் முன்னாள் ராணுவத்தி னரை வேலைக்கு எடுத்துக்கொள்வது என்பது மிகவும் அற்பமாகும். அக்னிபாதை திட்டத்திற்கு கார்ப்பரேட்டு கள் ஆதரவு அளிப்பதற்கான காரணம் வேறா கும். ராணுவத்திற்கான உற்பத்தித் தொழிற் சாலைகள் தனியார்துறைக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதால்,டாட்டாக்கள், மஹிந்த் ராக்கள் போன்ற பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் ராணுவ உற்பத்தித் திட்டங்களை எளிதாகப் பெற்றுக்கொண்டு விடும். அப்போது ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தினரைப் பணியில் அமர்த்து வதற்கு இவ்வாறு வீதியில் எறியப்படும் அக்னி வீரர்கள் அதிகமான அளவில் தேவைப்படு வார்கள். அவர்களைத் தங்களின் எதிர்கால நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள லாம். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் வெளி வரும் ராணுவத்தினரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசித்துக்கொண்டி ருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துத்து வா சக்திகளோ வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டு விரக்தியுடன் வெளிவரும் ராணு வத்தினரைத் தங்களின் மதவெறி நட வடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள லாம் எனப் பார்க்கின்றன.

பாஜக தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியா இவர்கள் குறித்துக் கூறியதைப் பார்க்க வேண்டும்.  பாஜக அலுவலகத்திற்குப் பாதுகாப்பிற்கு ஆட்களை வாடகைக்கு அமர்த்த வேண்டி யிருந்தால், அவர் அக்னிவீரர்களுக்கு முன்னு ரிமை கொடுப்பாராம். பஜ்ரங் தளத்திற்கும், இந்துத்துவா படைக்கும் ஆட்களைத் தேர்வு செய்யும்போதும் இதேபோன்று முன்னு ரிமை விரிவாக்கப்படுமாம். அக்னிபாதை திட்டமானது இந்திய அரசின் கேந்திரமான நிறுவனமான ராணுவத்தின் மீதான தாக்குதலாகும்.  இது எதிர்க்கப்பட வேண்டியதும், இதற்கெதிராகக் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி யதும், இது திரும்பப்பெறப்பட வேண்டியதும் அவசியமாகும்.

ஜூன் 22, 2022. 
தமிழில்: ச.வீரமணி

;