articles

img

மூலதனத்திற்கும் உழைப்புக்குமான முரண்பாடு - எம்.தாமஸ்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் ஈடுபடும் தொழில்கள் பட்டாசு, தீப்பெட்டி, ஜவுளித்தொழில், அச்சுத் தொழில்களாகும். விவசாய உற்பத்தியில் பருத்தி பிரதான பங்கு வகித்ததால் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை தாலுகாக்களில் ஜவுளி உற்பத்தித் தொழில் பிரதானமாக விளங்கியது. சிவகாசி, சாத்தூர், விருது நகர் தாலுக்காக்களில் பட்டாசு, தீப்பெட்டித் தொழில் கள், சிவகாசியில் அச்சுத்தொழில், சாத்தூரில் நிப்புத்  தொழில், விருதுநகரில் டின் பாக்டரிகள், சத்திரப் பட்டியில் காயங்களுக்கான மருத்துவ பேண்டேஜ் துணி தயாரித்தல். இந்தத் தொழில்களோடு உப தொழில்க ளும் வியாபாரமும் நிறைந்தது விருதுநகர் மாவட்டம். 

அதிக மக்கள் ஈடுபட்ட தொழிலாக கைத்தறித் தொழில் இருந்தது. பாரம்பரியத் தொழிலான கைத்தறி யின் மூலம் மக்களின் தேவையை (சந்தைத் தேவையை) பூர்த்தி செய்ய இயலவில்லை. அதனால் அது விசைத் தறித் தொழிலாகப் பரிணமித்தது. கைத்தறியில் உற் பத்திக்கான கூலி வழங்கப்பட்டது. விசைத்தறி மூலம் அதிக உற்பத்தி கிடைத்தது. மனித உழைப்பிற்கு அதே கூலிதான் வழங்கப்பட்டது. அதனால் (உபரி) லாபம் அதிகம் கிடைத்தது. 

பட்டாசு, தீப்பெட்டித் தொழில்கள் 1930க்கு பின் உருவானபோதிலும் சிறு தொழிலாக, சிறு முதலீட்டில் பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்கிய தொழிலாக மாறியது ஜனதா ஆட்சிக்காலத்தில் தான். 1977க்கு பின் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி ஆட்சியில் இடதுசாரி களின் கடுமையான நிர்ப்பந்தமும் இந்திய முதலாளிக ளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளும் சிறு தொழில்க ளும் வளர உதவின. மாவட்டம் முழுவதும் பல்கிப் பெருகிய தீப்பெட்டித் தொழில், அதன் உப தொழில் கள் பல லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்தது. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சுயமாகச் சம்பாதித்து வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்க ளுக்குக் கொடுத்தது. இந்தக் காலங்களில் பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் மூலம் பலனடைந்தது தொழிலாளி வர்க்கம். 1979இல் ஜனதா ஆட்சியை இன்றைய பாஜக  அப்போதைய ஜனசங்கம் கவிழ்த்தது. அதற்கு பின் வந்த ஆட்சிகளில் தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக மூலதனப் பொருட்களின் விலையேற்றத்தால் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உற்பத்திச் செல வைக் குறைத்தது. குறிப்பாக தீப்பெட்டித் தொழிலில் தீக்குச்சியின் அளவை, தீப்பெட்டியின் அளவை குறைத்தனர். அதிலிருந்து மீள முடியாத வகையில் வரிகள் மூலமும் விலையை உயர்த்தியது மூலமும் கடும் சிரமத்தைச் சந்தித்தது. தொழிலாளர்களுக்கும் (அதாவது உழைப்பிற்கும்) மூலதனத்திற்கும் இடை யில் முரண்பாடு முற்றியது.

ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் தள்ளப் பட்டது. அரசு கொள்முதல் செய்வதைக் கைவிட்டதால் பெரும் முதலாளிகளின் சூறைக்காடாய் பருத்தி கொள் முதல் மாறியது. உள்நாட்டுத் தேவை புறக்கணிக்கப் பட்டது. இல்லை, இல்லை. கொள்ளை லாபத்திற் காய் கட்டுப்பாடின்றி ஏற்றுமதி செய்யப்பட்டது. செயற் கையான தட்டுப்பாட்டை உருவாக்கும் வகையில் கொள்ளை லாபத்திற்காய் இந்திய முதலாளிகள் நூல்க ளைப் பதுக்கினர். அதற்கு எதிராக பாஜக ஆட்சியா ளர்கள் சிறு துரும்பைக்கூட அசைக்கவில்லை. மில்க ளிலும் உற்பத்திச் செலவை காட்டி நவீனமாக்கல் என்ற பெயரில் மனித உழைப்பை வெளியேற்றி நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்தனர். தொழில் உழைப்பைச் செலுத்தி உபரியை (லாபத்தை) பெருக்கித் தந்த தொழிலாளர்கள் கொத்துக் கொத் தாக கட்டாய ஓய்வு எனும் பெயரில் வெளியில் தூக்கி வீசப்பட்டனர். காண்டிராக்ட் முறை மூலம் உழைப்பைச் சுரண்டினர் முதலாளிகள்.

ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தரு வோம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த மோடியின் ஒன்றிய அரசு, பெரு முதலாளிகளின் பல்லக்கில் தான் பவனி வருகிறது. பெரு முதலாளிகளின் லாப வேட்டைக்காக சிறு, குறு தொழில்களின் மீது கடும் தாக்குதலை அரசின் கொள்கையே தொடுத்தது. பணமதிப்பிழப்பு, பருத்தி ஏற்றுமதி, நூல் பதுக்கல், ஜிஎஸ்டி வரி விதிப்பு, நூல் விலை உயர்வு போன்ற தாக்குதல்களால் விருதுநகர் மாவட்ட ஜவுளித்தொழில் குறிப்பாக விசைத்தறி நிலைகுலைந்து நிற்கிறது. மில்கள் மூடு விழாவிற்கு அணி வகுக்கின்றன.  இந்தளவு தொழில் நெருக்கடியை உருவாக்கி யுள்ள அரசின் கொள்கைக்கு எதிராக அணி திரளா மல், தொழிலாளர்களின் கூலியை குறைப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முயல்கின்றனர் உள்ளூர் முதலாளிகள். இதிலும் உழைப்பிற்கும் மூலதனத்திற் கும் இடையிலான முரண்பாடு முற்றி வருகிறது. 

உலகின் பல நாடுகளுக்கு பேனா நிப்பு உற்பத்தி செய்யும் தளமாக விளங்கியது சாத்தூர். தற்போது ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடு விலை உயர்வு, வரி விதிப்பின் காரணமாக அழிந்துவிட்டது. பேனா உற் பத்தியில் கார்ப்பரேட்டுகள் நுழைந்ததும் காரணம். சத்திரப்பட்டியில் உற்பத்தியாகும் மருத்துவத் துணி உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்தத் தொழிலும் அரசின் கொள்கைகளால் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலின் மூலப்பொருட்கள் விலை உயர்வு, பட்டாசு தயாரிக்க தடை விதித்ததும், பல லட்சம் உழைப்பாளி மக்களின் வாழ்வை கேள்விக்குறி யாக்கியது. இதில் இயந்திரத்தை பயன்படுத்த முடியாததால் இன்றும் மனித உழைப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது.

தீப்பெட்டித் தொழிலில் நெருக்கடியைச் சமாளிக்க இயந்திரத்தைப் புகுத்தி மனித உழைப்பை உற்பத்தி யிலிருந்து வெளியேற்றிவிட்டனர். விருதுநகர் மாவட்டத் தொழில்களில் பெரு முத லாளிகளுக்கும், சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு மான முரண்பாடு அதிகரித்து வருகிறது. அதே போல் உழைப்பிற்கும் மூலதனத்திற்குமான முரண்பாடு அதிகரித்து வருகிறது.

பெரு முதலாளிகளின் நலன்களை உயர்த்திப் பிடிக்கும் ஒன்றிய மோடி அரசின் கொள்கைகள் தான் தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் நெருக்க டியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தொழிலாளர்களின் வாழ்வை பாது காத்துக் கொண்டே தொழில்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. தொழில்கள் இல்லையேல் தொழி லாளி இல்லை. ஆகவே மோடி அரசின் நாசகரக் கொள்கைக ளுக்கு எதிராக இந்த முரண்பாடுகளை சரியாக கணித்து அதற்கேற்ப அனைத்து சக்திகளையும் திரட்டி முன்னேறுவோம். 

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) விருதுநகர் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்

;