செங்கோட்டையன் மனத்திறப்பின் மர்மம் என்ன?'
பாம்பின் நிழலும், பாஜக உறவும் ஒன்று என்பது உலகறிந்த ரகசி யம். அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து உருப்பட்டதாக ஒரு கட்சியைக் கூட காட்டமுடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்த லின் போது, பாஜகவிடமிருந்து அதிமுக விலகி, தேர்தலை சந்தித்தது. ஆனால் எடப்பாடி பழனி சாமியை பல வகைகளில் நிர்பந்தம் செய்து மீண்டும் கூட்டணி அமைத்தது பாஜக. அதிமுக அலுவலகத்தை பார்வையிடப் போவதாக சொல்லிக் கொண்டு தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை ரகசியமாக சந்தித்தார். எடப்பாடி பழனிசாமியை வழிக்கு கொண்டு வர செங்கோட்டையனை பாஜக துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது. செங்கோட்டை யனை அமித் ஷா ரகசியமாக சந்தித்தார். கூட்ட ணிக்கு எடப்பாடியார் இணங்கவில்லை என்றால் செங்கோட்டையன் மூலம் கட்சியை உடைக்க திட்டமிட்டனர். இதனால் வேறு வழி யின்றி, கூட்டணிக்கு ஒப்புக் கொண்டார் பழனி சாமி. இதுகுறித்த அறிவிப்பை கூட அமித் ஷா தான் வெளியிட்டார். அந்தக் கூட்டத்தில் பழனி சாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிறகு கெட்டுத்தான் போவேன், பெட் எவ்வ ளவு என்பதுபோல பாஜகவுடனான கூட்டணியை நியாயப்படுத்தினார் பழனிசாமி. இருந்தாலும் கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா? என்ப தற்கு விடை காணமுடியவில்லை. கூட்டணி ஆட்சி என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் செங்கோட்டை யனை துருப்புச் சீட்டாக பாஜக இறக்கியது. அவர் திடீரென மனம் திறக்கப் போவதாக அறிவித்தார். மனம் திறந்து அவர் சொன்னது என்பது ஓபிஎஸ், சசிகலா, தினகரன் போன்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்பதுதான். இதற்கு அவர் பத்து நாள் கெடுவும் விதித்தார். செங்கோட்டையன் மனம் திறந்து பேசி வாயை மூடுவதற்குள் பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன் துவங்கி, தமிழிசை வரை செங்கோட்டையன் சொல்வது சரிதான் என்று கூறினர். தங்களுடைய கூட்டணி கட்சி விவகா ரத்தில் தலையிடக்கூடாது என்ற குறைந்தபட்ச நாகரீகத்தையெல்லாம் பாஜகவினர் ஒருபோதும் பின்பற்றுவதில்லை. செங்கோட்டையனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பது ஆர்எஸ்எஸ் தான் என்பது உடனடியாக வெளிவந்தது. செங்கோட்டையன் மீது எந்த தவறும் இல்லை. அவரது குரல் கலகக் குரல் அல்ல என்று குட்டையை குழப்பி குருமூர்த்தி உடனடியாக கூவினார். அனைவரும் ஒன்றிணைந்தால் நல்லதுதானே என்றார் அவர். முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை தர்ம யுத்தம் நடத்துமாறு கூறி, அதிமுகவை சிதறடித்த பெரு மகனார் குருமூர்த்தி இப்போது அனைவரும் ஒன்றிணைந்தால் நல்லதுதானே என்று நல்ல வர் போல நாடகமாடுகிறார். செங்கோட்டையன் மனம் திறந்தவுடனேயே ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் கைதட்டி வரவேற்ற னர். எடப்பாடி பழனிசாமிக்கு கடிவாளம் போட்டு தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள் ளவே செங்கோட்டையனை தூண்டி விட்டுள்ள னர். இது கூட்டணி கட்சிகளுக்கு குழிதோண்ட பாஜக பின்பற்றும் வழக்கமான பாணிதான். செங்கோட்டையனுடைய கட்சிப் பொறுப்பு களை உடனடியாக பறித்து தன்னுடைய ஆத்தி ரத்தை வெளிப்படுத்தியுள்ளார் பழனிசாமி. அவரை பதற்றத்திலேயே வைத்திருக்க பாஜக இன்னும் பல வியூகங்களை வகுக்கும். புதை குழியில் சிக்கியவர் தப்பிக்க கையும் காலையும் ஆட்டி ஆழமாக புதைந்து போவது போல எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளை பாஜக பயன்படுத்திக் கொள்ளும். அதிமுக மீள ஒரே வழி திருதராஷ்டிர ஆலிங்கனத்திலிருந்து வெளியே வருவதுதான். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா? தமிழ்நாட்டை மீட்கப் போவதாக சொல்லிப் புறப்பட்ட பழனிசாமி கட்சியையாவது காப்பாற்று வாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி.