articles

img

தைராய்டு நோயும் ஹோமியோபதி மருத்துவமும் - மரு தெ.வெண்மணி

தைராய்டு நோயும் ஹோமியோபதி மருத்துவமும்

நோயின் அறிகுறிகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முழு நபருக்கும் - மனம், மற்றும் உடலுக்கு சிகிச்சையளிக்கும் நல்வாழ்வுக்கான அணுகுமுறையே ஹோமியோபதி மருத்துவம் ஆகும். உடல் மனம் இவ்விரு அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை ஹோமியோபதி தெரிவிக்கிறது. மேலும் நோயிலிருந்து நிரந்தர குணம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஊக்குவிக்கும் முழுமையான சிகிச்சையளிக்கும் மருத்துவ முறையாகவும். ஹோமியோபதி இருப்பதால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமுறையாகவும் உள்ளது. தைராய்டு நோயை ஹோமியோபதி மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் நோயாளியுடன் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் தேவையான அளவில் தேர்வு செய்யப்படுவதால் உடலின் இயற்கை சமநிலையை மீட்டெடுக்க முடியும். தைராய்டு மருந்துகள் (தைராய்டு ஹார்மோன்கள்) ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு குறைந்த தைராய்டு அளவை நிரப்பப் (Supplement) பயன்படுத்தப்படுகின்றன. ஹோமியோபதி மருத்துவம் தைராய்டு சுரப்பியை மீண்டும் செயல்படவைப்பதற்கும் தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பதற்கும் தூண்டுகோலாக தைராய்டு அளவை இயற்கையாக அதிகப்படுத்துவதற்குரிய நிரந்தரத் தீர்வை நோக்கி பயன்படுத்தப்படுகிறது. 

தைராய்டு சுரப்பி என்றால் என்ன? நமது கழுத்தின் முன்புறத்தில் இருக்கும் சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியே தைராய்டு. தைராய்டு சுரப்பி தைராக்ஸின் ட்ரையோடோதைரோனைன் ஆகிய ஹார்மோன்களை சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றம் (metabolism), மெய்யெழுச்சி மற்றும் பல ஹார்மோன்களின் சமநிலையை பாதுகாக்கும் முக்கிய பங்கை வகிக்கிறது. இது இரத்தத்தில் கால்சியம் அளவைக் கட்டுப்படுத்த உதவும் கால்சிட்டோனின் என்ற ஹார்மோனையும் உற்பத்தி செய்கிறது. தைராய்டு பிரச்சனைகளின் முக்கிய வகைகள் 1. ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) (தைராய்டு சுரப்பியின் குறைந்த செயல்பாடு) நோய்க்கான காரணங்கள்: ஆட்டோ இம்யூன் - ஹாஷிமோட்டோ நோய் (Autoimmune (Hashimoto’s Disease) அயோடின் குறைவு, ஹார்மோன் உற்பத்தி குறைவு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன.. ஹாஷிமோட்டோவின் நோய் ஹாஷிமோட்டோவின் தைராய்டிடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் நமது நோயெதிர்ப்பு அமைப்பு (Immune system) தைராய்டு சுரப்பியைத் தவறாகத் தாக்கும் ஒரு தன்னு டல் தாக்கக் கோளாறாகும். அதாவது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தவறுதலாக ஆரோக்கியமான உடல் திசுக்களைத் தாக்கி அழிக்கும்போது ஆட்டோ இம்யூன் கோளாறு ஏற்படுகிறது. இக்கோளாறினால் உரு வாகும் ஹாஷிமோட்டோ நோய் என்பது உங்கள் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும்.இது ஒரு நாள்பட்ட தன்னுடல் தாக்க நோயாகும். இது உங்கள் உடலில் தைராய்டு ஹார்மோனின் அளவை இயல்பை விடக் குறைக்கும்.  ஹாஷிமோட்டோ நோய்க்கான காரணங்கள் தைராய்ட் சுரப்பியை பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை  ஆட்டோ இம்யூன் நோயான ஹாஷிமோட்டோ நோய், பல  காரணிகளின் கலவையால் உருவாகிறது. பல கார ணங்கள் இருந்தாலும் குறிப்பிட்டு நாம் அறிந்து கொள்ள  வேண்டிய காரணங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ( Environmental Exposures ) மிக முக்கிய காரணியாக உள்ளது. அதிகப்படியான கதிர்வீச்சு வெளிப்பாட்டிற்கு நாம் இலக்காவது ஹாஷிமோட்டோவை உருவாக்கு வதற்கான அறியப்பட்ட ஆபத்து காரணியாகும். உணவு  அல்லது தண்ணீரில் உள்ள கதிரியக்கப் பொருளை உட்கொள்வது அல்லது அதனுடன் நீண்ட நேரம் உடலில் தொடர்பு கொள்வது, அதிக அளவு அயனியாக்கும் கதிர்வீச்சு (Ionizing radiation ) பெரும்பாலும் குறுகிய காலத்தில் உடலுக்குள் செலுத்தப்படுவதால், இது தைராய்டு சுரப்பிகளின் திசுக்கள் உள்பட உடல் செல்களை சேதப்படுத்துகிறது. பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடின்றி இப்புவியின் மீது சுற்றுச்சூழல் மற்றும் வேதியல் பாதிப்பை ஏற்படுத்தும் பொறுப்பற்ற நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் வெளிப்பாடு, மருத்துவ ரீதியாக தைராய்டு செயலிழப்புக்கான அதிகரித்த அபா யத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தொற்று நோயியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. இருதய கோளா றுகள் உளவியல் கோளாறுகள் உள்பட சில நோய்க ளுக்கு உட்கொள்ளப்படும் நீடித்த மருந்துகள் இந்நோய்க்கான காரணங்களில் ஒன்றாகவும் உள்ளன. ஹைப்போ தைராய்டிசம் அதாவது தைராக்ஸின் சுரப்பது  குறைவதால் சோர்வு, எடை அதிகரிப்பு குளிரை சகிக்க முடி யாமை, முடி உதிர்தல், மனஅழுத்தம் மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் ஹாஷிமோட்டோ நோய்  ஹோமியோபதி மருந்துகளால் முழுமையாக குணப்படுத்  தக்கூடியது. பழைய மகிழ்ச்சிகரமான துடிப்புடன் கூடிய  வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ஹோமியோபதி யில் முற்றிலும் சாத்தியமே.  2. ஹைபர் தைராடிசம் Hyperthyroidism (அதிக தைராய்டு ஹார்மோன்) நோய்க்கான காரணங்கள்:  கிரேவ்ஸ் நோய் (Graves’ disease) ஆன்டிபாடிகள் (நோயெதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் புரதங்கள்) தைராய்டு சுரப்பியை அதிக ஹார்மோனை உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன. இந்த தன்னுடல் தாக்க நிலையே கிரேவ்ஸ் நோயாகும். தைராய்டு முடிச்சுகள் (Thyroid Nodules): ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும் சுரப்பியில் அதிகப்படியான கட்டிகள். தைராய்டிடிஸ் (Thyroiditis): ஹார்மோன் கசிவுக்கு வழிவகுக்கும் தைராய்டு சுரப்பியின் வீக்கம். அதிகப்படியான அயோடின் நிறைந்த உணவுகள் அல்லது சில வகை மருந்துகளின் மோசமான பக்க விளைவுகள். பிட்யூட்டரி கோளாறுகள்: (Pituitary Disorders) தைராய்டு சுரப்பி எவ்வளவு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை பிட்யூட்டரி சுரப்பி நிர்ணயிக்கிறது. ஆனால் அரிய கட்டிகள் (Rare tumors) பிட்யூட்டரி சுரப்பி அதிகப்படியான தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன் (TSH) ஐ வெளியிட காரணமாகின்றன. தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன் (TSH) என்பது பிட்யூட்டரி சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்.  அதிக தைராய்டு ஹார்மோன் அறிகுறிகள் எடை இழப்பு, விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத்  துடிப்பு (படபடப்பு), நடுக்கம், அதிக வியர்வை, தூக்கக்  குறைவு வெப்ப சகிப்புத்தன்மையின்மை, பதற்றம் மன நிலை மாற்றங்கள் எரிச்சல் கழுத்தின் அடிப்பகுதியில் வீக்கம் (Goitre), வீங்கிய கண்கள் மற்றும் உடையக் கூடிய கேசம்.  பொதுவாக பரிந்துரைக்கப்படும்  சில ஹோமியோ மருந்துகள் நோயாளியின் உடல், மன நிலை மற்றும் தனிப்பட்ட  அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு ஹோமியோ பதி முறை அதற்குரிய மருந்தை தேர்வு செய்வதால் உட லின் இயற்கை ஹார்மோன் சமநிலையை சீராக்க ஹோமி யோபதி உதவுகிறது. இதுதான் ஹோமியோபதியின் சிறப்பாகும். இதற்கு ஹார்மோன் செயல்பாட்டை தூண்டும் தைராய்டினம் 3X/6X (Thyroidinum 3X/6X) மருந்தை குறிப்பிடலாம். குளிர் பயம், உடல் எடை அதிகம், சோர்வு ஹார்மோன் சமநிலை பிரச்சனைகள், மன உளைச்சல் ஜீரணக் கோளாறுகள், வாயு, வலது பக்கம் சுரப்பி வீக்கம் துக்கம், மன அழுத்தத்தால் ஹார்மோன் பாதிப்பு உடல் எடை குறைவு, பசி அதிகம்  போன்ற பிரச்சனைகளுக்காக கல்கேரியா கார்போனிகா  (Calcarea Carbonica), செபியா (Sepia), லைக்கோ போடியம் (Lycopodium), நாட்ரம் முரியாட்டிகம் (Natrum Muriaticum) – அயோடியம் (Iodium) போன்ற  ஹோமியோபதி மருந்துகள் நோயின் வீரியம் மற்றும்  அதன் பாதிப்புகள் நோயாளியின் உளவியல் நிலை யோடு ஆராய்ந்து ஹோமியோபதி மருத்துவரால் மட்டும்  தேவையான அளவில் அளிக்க முடியும்.  வாழ்க்கை முறை மாற்றம் சீரான அயோடின் உள்ள உணவுகள், பச்சைக் கீரைகள், காய்கறிகள் பழங்கள் உட்கொள்ள வேண்டும்.  மன அழுத்த கட்டுப்பாட்டிற்கு யோகா (Yoga) எனப்படும் உடல்நல பயிற்சி மற்றும் தியானம் (Meditation) எனப்படும் ஆழ்நிலை அமைதி பயிற்சி செய்யலாம். ஹோமியோபதி மருந்துகளுடன் கூடிய அறிவியல்பூர்வ யோகா நோயாளியின் உடல் மண்டலம் (Body System) இயல்பு நிலைக்கு திரும்புவதை விரைவாக்கும்.  ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதம் யுனானி உள்ளிட்ட  மருத்துவ முறைகளோடு யோகா அறிவியல் இந்திய முறை மருத்துவத்துறையில் இணைக்கப்பட்டதற்கான அடிப்படையை இதில் நாம் காணலாம். குறிப்பாக சராசரி 40 வயதைச் சுற்றியுள்ள அதற்கு மேலுள்ள தைராய்டு நோயாளிகளின் உடல் நிறை குறியீட்டெண் (B.M.I.) மற்றும் இதயத்தின் செயல்பாடு இவைகளை கேட்டறிந்து பெற்று ஆராய்ந்து ஹோமியோபதி மருத்து வர் ஆலோசனைகளை வழங்குவார். அதன் பிறகே  முழு உடல் நல பயிற்சி (சர்வாங்காசனம்) - போன்ற பயிற்சிகளை யோகா சிகிச்சையாளர் (Yoga Therapist) கண்காணிப்பில் துவக்குவது மிகச்சிறந்தது. பயிற்சியை பெற்று தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் பத்து பதினைந்து நிமிடத்திற்கு மிகாமல் சிரமமின்றி பயிற்சி செய்யலாம். இந்த சிகிச்சை ஒருங்கிணைப்பை தைராய்டு நோயாளி யைப்பற்றி நன்கு அறிந்த ஹோமியோபதி மருத்து வர்தான் முடிவு செய்ய முடியும். போதுமான நேர உறக்கம்  தேவை. படுக்கைக்கு செல்லும்முன் சற்று திறந்த வெளியில் உலாவச் செல்லலாம். இனிமையான வாத்திய இசையை கேட்டபடியே பிடித்த புத்தகத்தை படுக்கையிருந்தபடியே வாசிக்கலாம். முறையான பரிசோதனையின் மூலம் TSH, T3, T4 அளவுகளை கண்டறிய அதற்கேற்ப மருந்துகளை அளிக்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஹோமியோபதி மருத்து வர் பரிந்துரைப்பார். மருந்து எதுவாக இருந்தாலும் தகுதி பெற்ற ஹோமியோபதி மருத்துவரின் வழிகாட்டுதலோடு மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஹோமியோபதி மருத்து வம் மட்டுமல்ல நோயிலிருந்து மீண்டு வாழ்க்கையை புதிய உற்சாகத்தோடு துவங்கும் வாழ்வியல் அணுகு முறையுமாகும்.