காலத்தை வென்றவர்கள் டி.எல்....இணையிலா ஈரெழுத்து!
டி.எல். என அனைவராலும் அன்பு டன் அழைக்கப்பட்டவர் தோழர் தே. லட்சுமணன். அவர் பணியில் இருக்கும்போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை அமைக் கப் பாடுபட்டவர். அவர் பணி புரிந்த கால்நடைத்துறையில் தமிழ்நாடு கால் நடை ஆய்வாளர் சங்கத்தை உருவாக்கி அதன் மாநிலப் பொதுச்செயலாளராக செயல்பட்டவர். அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி னார். மாற்றுத் திறனாளிகளுக்காக, சிறு பான்மை மக்களுக்காக, சமூக மாற்றத்திற் காக தனது இறுதி மூச்சுவரை உழைத்துக் கொண்டிருந்தார். அனைத்து நூல்களையும் தேடித் தேடி படிப்பார். வரலாற்று நிகழ்வுகளை அனை வருக்கும் புரியும்படி சுருக்கமாக எடுத்து ரைப்பார். அவர் செங்கல்பட்டில் பாரதி மன்றத் தை உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து முற்போக்குக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்றார். தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய 250க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைப்பை உரு வாக்கி அதற்கும் தலைவராக இருந்து திறம்படச் செயல்பட்டார். இன்று மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 1,500 ரூபாய் உதவித் தொகை பெறுகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் தோழர் டி.எல்.தான். தற்போது 4 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் அந்த உதவித் தொ கையை பெற்று பயன் பெறுகிறார்கள். இவர் 2020 ஆகஸ்ட் 24 ஆம் நாள் கொரோனா தீநுண்மிக்குப் பலியானார். ..பெரணமல்லூர் சேகரன்