articles

img

காணாமல் போகும் வாழைப்பழங்கள் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

காணாமல் போகும் வாழைப்பழங்கள்

“உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழ ரகங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு ரகத்தை மட்டுமே நாம் எப்போதும் உண்கிறோம். சூழலுக்கு இது பொருத்தமானதில்லை. வாழைப்பழ இனங்களின் உயிர்ப் பன்மயத்தன்மையில் உண்டாகும் தாக்கம் அதன் அழிவிற்கு வழிவகுக்கிறது. வருங்காலத்தில் மற்ற பழ ரகங்களுக்கு என்ன நடக்கும் என்பதை இது காட்டுகிறது” என்று உணவியல் பத்திரிகையாளரும் ஒலிபரப்பாளரும் “அழிப்பதற்காக உண்கிறோம்- உலகின் மிக அரிய பழங்கள் மற்றும் அவற்றை நாம் ஏன் பாதுகாக்கவேண்டும்? (Eating to Extinction) என்ற நூலின் ஆசிரியருமான டான் சாலடினோ (Dan Saladino) கூறுகிறார். ஒரு வாழைப்பழத்தின் தோலை உரிக்கும்போது… ரோம் நகரில் சமீபத்தில் நடந்த உலக 

அமைப்பின் (World Banana Forum) மாநாடு தலைப்புச்செய்திகளில் இடம்பெறுமளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை. “எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த மஞ்சள் நிறத் தோலுள்ள பழம் சுரங்கத்தில் வழிகாட்டும் கனரி (Canary) பறவை போல நம் நவீன உணவு முறைக்கு வழிகாட்டி. இன்றைய நிலையில் இதன் பலவீனமான தன்மை நாம் நம் உணவுமுறையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஒருவர் வாழைப்பழத்தின் தோலை உரிக்கும்போது அதிச யிக்கத்தக்க பத்து பில்லியன் டாலர் மதிப்புள்ள விநி யோகச்சங்கிலியின் மறுமுனையில் இருந்தே அவர்  அதைப் பெறுகிறார் என்பதை உணரவேண்டும். விலை மலிவான, எப்போதும் உண்ணத் தயாராக இருக்கும் இந்த வெப்பமண்டலப்பகுதி பழம் பூமியின் குறுக்கும் நெடுக்குமாக தன்  விநியோகப்பயணத்தை தொடர்ந்து கொண்டே யிருக்கிறது. ஆனால் நாம் அதிகமாக நுகரும் இதன் ஒவ்வொரு ரகத்தையும் அழியாமல் பாது காக்க நாம் முயற்சி செய்யவேண்டும்” என்று சால டினோ கூறுகிறார். “ஆயிரக்கணக்கான ரகங்கள் இருக்க நாம் ஏன் காவண்டிஷ் (Cavendish) ரகத்தை மட்டும் அதிகமாக நுகர்கிறோம்?” என்று ஐநா உணவு மற்றும் வேளாண் கழகத்தின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் க்யூ டான்கியூ (Dr Qu Dongyu) கூறுகிறார். வாழைப்பழ ரகங்கள் அனைத்தும் ஏன் பார்வைக்கு ஒரே போல இருக்கின்றன என்று நாம்  யோசிப்பதில்லை. வனிலா ஐஸ்க்ரீமின் மணமு டைய, வழவழப்புத்தன்மையுடைய இந்தோனே ஷியாவின் நீல ஜாவா (blue java) அல்லது “அடுத்தி ருக்கும் மலையில் இருந்தும் வாசனையை நுகர லாம்” என்ற பொருள்படும் நறுமணம் மிகுந்த சீனா வின் கோ சான் ஹியாங் (go san heong) போன்ற ரகங்களை அதிகமாக வாங்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்போதுதான் அந்த ரகம் காப்பாற்றப்படும். விளைச்சல் அதிகம் கொடுக்கக்கூடிய, விலை  மலிவான ஒரு இனத்தை மட்டுமே பெருமளவில் பயிரிடுவதால் உலகம் முழுவதும் அதிகமாக விற்பனை செய்யப்படும் வாழைப்பழ ரகமாக அது மாறுகிறது. இதனால் மற்ற உணவுத்தாவரங்களும் அழியும் ஆபத்தில் உள்ளன. விரைவாக மாறி வரும் காலநிலையில் ஒற்றைப்பயிரிடல் முறை யில் பயிரிடப்படும் ரகங்கள் தங்களை தகவ மைத்துக்கொள்வது கடினம். 80% உலக விற்பனை விதையில் இருந்து வளரும் காட்டு வாழைப்பழங்கள் போலில்லாமல் குளோன் முறை யில் உருவாக்கப்படும் காவண்டிஷ் ரகம் தாய்க்கன்றில் இருந்தே பிறந்து வளர்கின்றன. அதனால் இவை சூழல் அச்சுறுத்தல்களை சமா ளித்து வேறு முறையில் பரிணாம மாற்றம் அடைந்து  வளர வாய்ப்பில்லை. பனாமா நோய் அல்லது ஃப்யூசேரியம் வில்ட் (fusarium wilt) என்ற நோயின்  தாக்குதல் இந்த ரகத்தை அதிகம் பாதிக்கிறது. ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி களில் ஒற்றைப்பயிராக வளர்க்கப்படும் காவண்டிஷ் ரகமே உலக வாழைப்பழ ரகங்களில் அதிகம் நுகரப்படும் பழம். நுகர்வில் இது 80%. ஒரு சில ஸ்போர்கள் மூலம் பரவும் இந்த நோய் ஒரு தோட்டத்தையே அழிக்கவல்லது. அந்த மண்ணில் வாழையை பயிரிடுவது பயனற்றது. இதற்கு  தீர்வு மரபணு எடிட்டிங் அல்லது மரபணு முறையில்  உருவாக்கப்படும் மாற்றம். இந்த ரகத்தை தாக்கக்கூடிய பல வகை பனாமா நோய் நோய் அணுக்களுக்கு எதிராக பல  ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து பல புதிய  ரகங்களை கண்டுபிடித்திருந்தாலும் இப்பிரச்ச னைக்கு அது ஒரு நிரந்தர தீர்வாகாது. உணவு முறைகளில் பன்முகத்தன்மையை கொண்டு வருவதே இதற்கு நிரந்தரத்தீர்வு” என்று ஆஸ்தி ரேலியா குவிஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக் கழக பேராசிரியர் ஜேம்ஸ் டேல் (James Dale) கூறுகிறார். நம் உணவுமுறைகள் காலநிலை மாற்றத்திற்கு  பொருத்தமானவையாக இல்லை. இயற்கையில் ஒற்றைப்பயிர் வளர்ப்புமுறை நீடித்து நிலைத்தி ருக்கமுடியாது. இந்த ஆய்வில் இருந்து நாம் பாடம் கற்கவேண்டும். உயர் விளைச்சல் தரக்கூடிய  ஒரு சில பயிர்களை மட்டுமே அறிமுகப்படுத்து வதால் பன்முகத்தன்மை இல்லாமல் போகிறது. கேம்ப்ரிட்ஜ் தேசிய வேளாண் தாவரவியல் கழகம் (National Institute of Agricultural Botany  (NIAB), நார்விச்சில் (Norwich) உள்ள ஜான்  இன்னெஸ் மையம் (John Innes Centre) போன்ற  யு கேயின் முன்னணி பயிர் ஆராய்ச்சி நிறு வனங்கள் நவீன ரகங்களால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட பாரம்பரிய பயிரினங்க ளின் பன்முகத்தன்மையை வயல் நிலங்களுக்கு மரபணு முறையில் கொண்டுவர முயல்கின்றனர். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு சில  ரகங்களில் இருந்து மட்டுமே உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்ட காபி போன்ற உத்தரவாதமில்லாத, ஆபத்தான நிலையில் இருக்கும் பயிர்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இன்று நாம் நம்பியிருக்கும் அரபிகா  (Arabica) மற்றும்ரொபஸ்ட்டா (robusta) ஆகியவை மிக பலவீனமானநிலையில் உள்ளன. காஃபியும் கோதுமையும் பட்டாணியும் இதை சமாளிக்க க்யூ (Kew) தாவரவியல் பூங்கா ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் உள்ள  120க்கும் மேற்பட்ட காபி ரகங்களில் இருந்து நம்பகத்தன்மையும் சுவையும் மிகுந்த புதிய ரகங்களை உருவாக்கியுள்ளனர். இவற்றில் சியாரலியோனில் காணப்படும் 1950களில் அழியும்  நிலைக்கு தள்ளப்பட்ட காஃபியெஸ் ஸ்டெனபிலா (Coffea stenophylla) என்ற ரகம் மிகச்சிறந்தது என்று கருதப்படுகிறது. 2023 மாண்ட்ரீல் உயிர்ப்பன்மயத்தன்மை உச்சி மாநாட்டில் 196 நாடுகளுக்கு இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட 2030 ஆம் ஆண்டிற்குள் 30%  நிலம் மற்றும் கடற்பகுதியின் உயிர்ப்பன்மயத் தன்மையைக் காப்பது என்ற ஒப்பந்தம் நம்பிக்கை யளிக்கும் ஒன்று. அழியும் ஆபத்தை எதிர்நோக்கும் உயிரினங்களை காக்க வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் ஒரு அம்சம். இவற்றில் வளர்ப்பிற்குரியதாக மாற்றப்பட்ட, மில்லியன்கணக்கான ஆண்டுகளாக மனிதன் உணவிற்காக மட்டுமே பயிரிடும் ஏழாயிரம் தாவ ரங்களும் அடங்கும். வைல்டு ஃபார்ம்டு (Wildfarmed) போன்ற விவசாய அமைப்புகள் பல  வகை கோதுமை ரகங்களை உருவாக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரகங்களில் இருந்து கிடைக்கும் கோதுமை மாவு யு கே முழுவதும் இருக்கும் பீசா (Pizza) விநியோக அமைப்புகள் மூலம் பிரபலமடைந்துவருகிறது. கிழக்கு இங்கிலாந்தில் மூன்று உணவு மற்றும்  வேளாண் நிபுணர்கள்இணைந்து தோற்றுவித்த ஹாட்மிடாட்ஸ் (Hodmedod’s) என்ற வணிக அமைப்பு பிரிட்டனில் இரும்புயுகத்தில் பயிரி டப்பட்ட, ஆனால் இன்று புறக்கணிக்கப்பட்ட பட்டாணி (carlin peas) மற்றும் எம்மர் கோதுமை (emmer wheat) போன்ற தானியங்கள், பயிறு ரகங்களை மீட்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. பல ரக பயிர்களை நுகர்வோர் ஏற்கவேண்டும். இதன் மூலமே பன்முகத்தன்மையை நம்மால் நிலைநிறுத்தமுடியும். இதுவரை வாங்காத புதிய பீன்ஸ், பட்டாணி, கோதுமை, வாழைப்பழம் போன்றவற்றின் புதிய ரகங்களை நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். இது ஒன்றே காணாமல் போய்க் கொண்டிருக்கும் வாழைப்பழம் உள்ளிட்ட எல்லா உணவு ரகங்களை யும் காக்க நம் முன் உள்ள ஒரே வழி என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.