தியாகம் சேவை அர்ப்பணிப்பு பி.ஆர்
விடுதலைப் போரின் முக்கிய நிகழ்வான சைமன் கமிஷன் எதிர்ப்பில் கங்கை நதியில் கலந்து கொண்டவர். மாவீரன் பகத்சிங் துவங்கிய பாரத நவ ஜவான் சபா-வில் இணைந்து செயல்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரபல தலைவர்களில் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் ஒருவர். சிஐடியுவின் நிறுவகத் தலைவர். சென்னை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, சேலம் சதி வழக்கு என மூன்று சதி வழக்குகளை எதிர்கொண்டவர். பிரிட்டிஷ் ஆட்சியிலும் விடுதலைக்குப் பிந்தைய ஆட்சியிலும் பல ஆண்டு காலம் சிறையில் இருந்தவர். நாட்டின் முதல் தேர்தலின் போது சிறையிலிருந்த படியே வெற்றி பெற்றவர். சென்னை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகச் செயல்பட்டவர். ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ‘நியூ ஏஜ்’ ஆங்கில ஏட்டின் ஆசிரியராக செயல்பட்டவர். தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சிக்கு தீவிரப் பங்காற்றியவர். தொழிலாளர் நலனுக்கும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். நாட்டில் சமத்துவம் தழைத்திட தன்னலமற்று உழைத்தவர். தியாகம், சேவை, அர்ப்பணிப்பு அதன் பெயர் பி.ஆர்.எனும் பி.ராமமூர்த்தி.