மக்கள் நலனுக்காக நாளெல்லாம் களம்கண்ட தோழர் அன்பழகன் இடிதாக்கி மரணம்: குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குக!
அரசுக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை, அக்.14 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், மருதுவாஞ்சேரி கிராமத்தில் இடி தாக்கி மரணமடைந்த அன்பழகன் குடும்பத்திற்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நட ராஜன், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குட வாசல் வடக்கு ஒன்றியச் செயலாளராக மக்கள் பணியாற்றி வந்த அன்பழகன் திங்கட்கிழமை (அக்.13) மாலை வீட்டின் அருகேயுள்ள அவரது வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென பெய்த மழை மற்றும் இடி மின்ன லில் அன்பழகன் சிக்கியுள்ளார். இடி, மின்னல் தாக்கியதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவரை மீட்டு பொது மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த அன்பழகனின் குடும்பம் ஒரு குறு விவசாய குடும்பமாகும். அவரது குடும்பத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.