பேட்ரிஸ் லுமும்பா: ஆப்பிரிக்க விடுதலையின் புரட்சி வீரன்
1925 ஜூலை 2 அன்று பிறந்து 1961 ஜனவரி 17-ல் படுகொலை செய்யப்பட்ட பேட்ரிஸ் லுமும்பாவின் நூறாவது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. காங்கோவைப் பெல்ஜியத்தின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுவித்த இந்தப் புரட்சித் தலைவரின் வாழ்க்கையும் போராட்டமும் இன்றும் உலக விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. காலனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை காங்கோ தேசிய இயக்கத்திற்குத் தலைமையேற்று, பெல்ஜிய காலனி ஆதிக்கத்திற்கும் ஏகாதிபத்திய தலையீடுகளுக்கும் எதிராக மக்களை இன, பிராந்திய வேறுபாடுகள் இன்றி ஒற்றுமைப்படுத்தியவர் லுமும்பா. அற்புதமான சொற்பொழிவாளரும் அமைப்பாளருமான அவர், ஆப்பிரிக்க ஒற்றுமை, தேசிய இறையாண்மை, உழைக்கும் மக்களின் விடுதலைக்காக எவ்வித ஊசலாட்டமும் இன்றிப் போராடினார். 200 ஆண்டுகளுக்கு முன்பு லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதிகள் அனுபவித்த கொடுமைகளை ஆப்பிரிக்காவும் சந்தித்தது. காலனிய ஆதிக்கம், அடிமைத்தனம், கட்டாய மதமாற்றம், கலாச்சாரச் சீரழிவு, இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல் என்ற கொடுமைகளின் பட்டியல் நீண்டது. சுதந்திரப் போராட்டத்தில் காங்கோ தனது பாதி மக்களை இழந்தது. ஏகாதிபத்திய சதியும் படுகொலையும் சிறிது காலமே லுமும்பா அதிகாரத்தில் இருந்தபோதும், சுதந்திர காங்கோவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு ஆப்பிரிக்காவிலும் உலகெங்கி லும் உள்ள மக்களை வெகுவாக ஈர்த்தது. இதனால் மேற்கத்திய சக்திகள் அவரை ஆபத்தானவராகக் கருதின. 1960 செப்டம்பர் 14-ல், சிஐஏ, பெல்ஜிய உளவுப்பிரிவு மற்றும் மேற்கத்திய சக்திகள் கர்னல் மொபுட்டு தலைமையில் லுமும்பா அரசுக்கு எதிராகச் சதி செய்தன. லுமும்பாவைக் கைது செய்து மாதக்கணக்கில் சித்திரவதை செய்தனர். 1961 ஜனவரி 17-ல் வெறும் 35 ஆவது வயதில் லுமும்பா படு கொலை செய்யப்பட்டார். லுமும்பாவின் வாழ்க்கையும் மரணமும் ஆப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் சின்ன மாக மாறியது. அவரது போராட்ட உணர்வு இன்றும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊக்கமளிக்கிறது.