articles

img

“கொண்டாடப்பட வேண்டியவர்கள் நம் தாத்தா பாட்டிகள்

கொண்டாடப்பட வேண்டியவர்கள் நம் தாத்தா பாட்டிகள்

இறுதியாண்டு சட்டவியல் படிக்கும் தேஜஸ்வினி சுகுமாரன் எழுதிய முதல் ஆங்கிலப் புத்தகம் இது. தனது தாய்வழி மற்றும் தந்தைவழி தாத்தா பாட்டிகள் பற்றிய கருத்தாழமிக்க நூல். இளைய தலைமுறையினர் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் புரிந்துகொள்ள வும், அவர்களின் தியாகங்களை மதிக்கவும் உதவும் படைப்பு. தந்தைவழித் தாத்தாவின் உன்னத வாழ்வு தந்தைவழித் தாத்தா சப் ரிஜிஸ்ட ராராக இருந்து அனைவருக்கும் நிலம் மற்றும் சொத்துப் பத்திரங்களைப் பதிவு செய்த உத்தியோகத்தர். ஊழ லும் பணவெறியும் தலைவிரித்தா டும் காலத்தில், தனது பெயரில் இறுதி வரை எந்தச் சொத்தும் வாங்காமல் நேர்மையாக வாழ்ந்ததும், தான் குடி யிருந்த வீட்டையே தனது மனைவி பெயரில் பத்திரம் பதிய வைத்த உன்னத மனப்பான்மையை அழ காகப் பதிவு செய்துள்ளார். கல்வியின் மீதான ஏக்கம் தந்தைவழிப் பாட்டி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது திருமணம் நடந்து கல்வி நின்றுபோனதும், ஆறு பிள்ளைகளை வளர்த்த பின்னர் பேத்தியிடம் செல்லிடப்பேசி பயன் படுத்தக் கற்றுக்கொண்ட தருணங்க ளையும் விவரிக்கும் வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன. கல்வி யின் மீதான அவரது ஏக்கமும், வய தான காலத்திலும் புதிய தொழில் நுட்பங்களைக் கற்கும் ஆர்வமும் வியப்பை ஏற்படுத்துகின்றன. அன்பின் நினைவுகள் தாய்வழிப் பாட்டி மனநலம் குன்றியிருந்தபோதிலும், இளமை யில் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி  பெற்றிருந்ததும், வயதான காலத்தில்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் மறைவாக வாழைப் பழம் உண்ணும் சுவையான சம்ப வங்களையும் நூலாசிரியர் மிகுந்த பாசத்துடன் விவரித்துள்ளார். தன்னைக் குழந்தைப் பருவத்திலி ருந்து வளர்த்த தாய்வழித் தாத்தா வுடன் தொலைக்காட்சி ரிமோட்டிற் காக சண்டையிட்டதும், பள்ளி முடிந்து வந்தவுடன் இளநீர், தின் பண்டங்கள் தவறாமல் கொடுத்த அன்பான நினைவுகளும் நெஞ்சை உருக்குகின்றன. ஒவ்வொரு நினை வும் அவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வேதனையான பிரிவு தாத்தாவின் பார்வை படிப்படியா கக் குறைந்து பாசமிக்க பேத்தியைப் பார்க்கவே முடியாமல் போனதும், மறதி நோய் (டிமென்சியா) பாதித்துப் பேத்தியின் பெயரையே மறந்த கொடுமையை விவரித்துள்ளமை நெஞ்சைப் பிசையும் வண்ணம் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு தான் நூலின் ஆசிரியையான தேஜ ஸ்வினியை ஆழமாகப் பாதித்து இந்நூலை எழுத தூண்டியது. 107 பக்கங்கள் கொண்ட இந்த ஏழு அத்தியாயங்களை உடைய நூலை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும். முதல் புத்தகம் என்று நம்ப முடியாத அளவிற்கு நேர்த்தியான சொல்லாடலும், உணர்வுபூர்வமான விவரணையும் இப்புத்தகத்தின் சிறப்பம்சங்கள். அவசியம் தமி ழாக்கம் செய்யப்பட வேண்டிய அரிய பொக்கிஷம்.