articles

img

இ-சேவை, ஆதார் மைய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்குக! சென்னையில் சிஐடியு தர்ணா

இ-சேவை, ஆதார் மைய ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்குக! சென்னையில் சிஐடியு தர்ணா

சென்னை, பிப். 23 - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறு வனத்தின் கீழ் இயங்கும் இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக 26,000 ரூபாய்  வழங்கக் கோரி, தமிழ்நாடு தரவு உள்ளீட்டா ளர்கள் சங்கத்தினர் (சிஐடியு) திங்களன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலத்  தலைவர் கே.சி.கோபி குமார், 12 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டாலும் வெறும்  8,619 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப் படுவதாகச் சாடினார். ஒரு நாளில் ஐந்து முறை வருகைப் பதிவு செய்யக் கோரும் ‘நவீன கொத்தடிமை’ முறையை ரத்து செய்ய  வேண்டும் என்றும், பி.எப் - இ.எஸ்.ஐ பலன்கள் ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை  என்றும் அவர் குற்றம் சாட்டினார். மை யங்களில் அடிப்படைத் தேவையான காகி தங்கள், அச்சு மை மற்றும் பெண் ஊழி யர்களுக்குக் கழிப்பறை வசதிகள் இல்லை என்பது வேதனையளிப்பதாக நிர்வாகி கள் தெரிவித்தனர். 3 ஆண்டுகளாக வழங்கப் படாத போனஸ் மற்றும் நிலுவை ஊதி யத்தை வழங்க அரசு உடனடியாகத் தலையிட  வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தைச் சிஐடியு மாநிலத்  துணைப் பொதுச் செயலாளர் திருச்செல்வன்  தொடங்கி வைக்க, ஏ.கிருஷ்ணமூர்த்தி நிறை வுரையாற்றினார். சிஐடியு மாநிலத் துணைச் செயலாளர் வி.குமார், சம்மேளனப் பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார், சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.மனோஜ்குமார், துணைத் தலைவர் எஸ்.சுகுமாறன், துணைச்  செயலாளர் எஸ்.சபரிஸ், மாவட்டத் தலைவர்  ஏ.முருகானந்தம், செயலாளர் வி.குப்புசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். பொருளா ளர் பி.சசிரேகா நன்றி கூறினார்.