முதுமையைத் தள்ளிப் போட உதவும் புதிய மருந்து சிதம்பரம் ரவிச்சந்திரன்
முதுமையைத் தடுக்கும் மருந்து விலங்குகளின் வாழ்நாளையும் நீடிக்க உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்துகளில் ஒன்றான ராப்பமைசின் (Rapamycin) என்ற மருந்து ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஹைக்ராஸ்கோப்பிகஸ் (Streptomyces hygroscopicus) என்ற மண்ணில் வாழும் பாக்டீரியாவில் இருந்து முதல்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் பல நூற்றாண்டுகளாக வாழ்நாளை நீட்டிக்கும் வழிமுறைகளைத் தேடுகிறான்.
உண்ணும் முறை அல்கெமிஸ்ட்டுகள் (Alchemists) ஒரு போதும் இதற்கான வழி என்று சொல்லப்பட்ட, தத்துவ அறிஞர்கள் கூறிய மாயாஜாலக் கல்லை கண்டுபிடிக்கவில்லை. குறைவாக சாப்பிடுவது நீண்ட ஆயுளுக்கு உதவும் சிறந்த வழி என்று சில ஆய்வக விலங்குகள் மூலம் நிரூபிக்கப பட்டுள்ளது. ஆனால் உண்ணும் உணவை அனுபவித்துக் கொண்டு நம்மால் நீண்ட காலம் வாழும் வழியைக் கண்டறியமுடியுமா? உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் கிடைக்கும் உயிரியல் விளைவுகளுக்கு சமமான பலன் தரும் வேதிக் கூட்டுப்பொருட்களே இதற்குரிய வழி என்று கருதப்படுகிறது. ராப்பமைசின் மற்றும் மெட்ஃபார்மின் (Metformin) ஆகியவை உணவுக் கட்டுப்பாட்டிற்கான இரண்டு புகழ்பெற்ற மருந்துகள். “ராப்பமைசின் குறைவாக சாப்பிடு வது அல்லது உணவுக் கட்டுப்பாட்டால் கிடைக்கும் நன்மைகளைத் தருகிறது. ஆனால் மெட்ஃபார்மின் அவ்வாறு செய்வதில்லை” என்றுஆய்வுக் குழுவின் தலைவரும் ஈஸ்ட் ஆங்கிலியா (East Anglia) பல்கலைக்கழக உயிரி அறிவியல் பள்ளி முது முனைவர் பட்ட ஆய்வாளருமான சாஹிதா சுல்தானோவா (Zahida Sultanova) கூறுகிறார். நன்கு உணவூட்டப்பட்டஆய்வக எலிகளை விட உணவுக் கட்டுப்பாட்டுடன் குறைவாக சாப்பிட்ட ஆய்வக எலிகள் நீண்ட காலம் நல முடன் வாழ்ந்தன. இது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது. உணவுக் கட்டுப்பாடு களே நீண்ட ஆயுளுக்கான தங்கவிதி என்பது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்த இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது. கலோரி கட்டுப்பாடுகள் மிக நல்ல பய னைத் தருகின்றன. ஆனால் நிரந்தர உணவுக் கட்டுப்பாடு பலருக்கு கடினமாகவுள்ளது. உண்பதன் மூலம் கிடைக்கும் அனு பவத்தை அவர்களால் பெறமுடியவில்லை. மித மிஞ்சிய உணவு உடல் ஆரோக்கியத்திற்கு கேடா னது. இதனால் உணவுக் கட்டுப்பாட்டின் பயன்களைத் தரும் மருந்துகளை கண்டு பிடிப்பதில் ஆய்வுக் குழுவினர் ஈடுபட்டனர். விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தா மல் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் கிடைக்கும் பயன்களைத் தரும் மருந்துகளைக் கண்டு பிடிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். 1970களில் ஈஸ்டர் தீவு மண்ணில் வாழும் பாக்டீரியாவில் இருந்து ராப்பமைசின் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் புதிய உறுப்பை நோயாளியின் உடல் ஏற்க மறுப்பதை (organ transplant rejection) தடுக்க இம்மருந்தை இப்போது மருத்துவ நிபு ணர்கள் பயன்படுத்துகின்றனர். இது வலிமை யான நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் (immunosuppressant) பொருள். ராப்பமைசினும் மெட்ஃபார்மினும் சத்துகள் அபரிமிதமாக இருக்கும்போது ஒரு மூலக்கூறியல் தடுப்பு வேதி வினை மூலம் இந்த மருந்து வேலை செய்கிறது. டைப் 2 சர்க்கரை நோயில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த பரவலாக மெட்ஃபார்மின் பரிந்து ரைக்கப்படுகிறது. இது பிரெஞ்சு லிலக் (French lilac) அல்லது கோட்ஸ் ரூ (Goat’s rue) என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்படு கிறது. இது ஃபேபேசியே (Fabaceae) என்ற இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்த ஃபேபாய்டியே (Faboideae) துணைக் குடும்பத்தில் உள்ள கலேகா அஃபிசினாலிஸ் (Galega officinalis) அல்லது கலேகா (galega) என்று பொதுவாக அறியப்படும் மருத்துவ குண முடைய தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு செயற்கைப் பொருள். இந்த இரு மருந்துகளும் சத்துகள் மற்றும் ஆற்றலை உண ரும் உடலின் திறனுடன் தொடர்புடையவை. இதனால் உயிரியலாளர்கள் குறைவாக சாப்பிடுவதால் தூண்டப்பட்டு பெறப்படும் நன்மைகளை இப்பொருட்கள் செயல்படும் விதத்தில் இருந்து அறிய முயல்கின்றனர். இதில் ஏதேனும் ஒட்டுமொத்த பாணிகள் உள்ளனவா என்பதை அறிய விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான ஆய்வறிக்கைகளை ஆராய்ந்தனர். இறுதியில் உயிர் வாழ்தல் பற்றிய போது மான விவரங்கள் அடங்கிய மீன் முதல் குரங்கு கள் வரை உள்ள எட்டு வகை முதுகெலும்பிகள் பற்றிய 167 ஆய்வுகளை எடுத்துக்கொண்டனர். ஆய்விற்காக ராப்பமைசின், மெட்ஃபார்மின் மற்றும் கட்டுப்பாட்டுடன் குறைவாக உண்ணு தல் ஆகிய மூன்று வகை நீண்ட நாள் வாழ்தல் தொடர்பான கோட்பாடுகள் பயன்படுத்தப் பட்டன. நீண்டநாள் வாழ கட்டுப்பாட்டுடன் குறை வாக உண்பதே அனைத்து விலங்குகளுக்கும் சிறந்த முதல் வழி என்று ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது இடத்தில் ராப்பமைசின் இடம்பெற்றது. இதற்கு மாறாக மெட்ஃபார்மின் தெளிவான எந்த நன்மையையும் தரவில்லை. ராப்பமைசினால் ஏற்படும் பயன்கள் ஆண் மற்றும் பெண்களிடம் ஒரே மாதிரி பலன்களைத் தந்தது. சிறிய அளவுகளில் உண்பதும் உண்ணா விரதம் இருப்பதும் சிறிது சிறிதாக உண்பது அல்லது அவ்வப்போது உண்ணா விரதம் இருந்து உண்ப தால் கிடைக்கும் பயன்களில் பெரிய வேறுபாடு கள் காணப்படவில்லை. ராப்பமைசின் நீண்ட நாள் வாழ உதவும் சிறந்த மருந்து என்பதை இதன் மூலம் அறியமுடிந்தது. முதுமை என்பது ஒரு நோயல்ல. ஆனால் புற்றுநோய் முதல் டிமென்சியா வரை உள்ள பல நோய்கள் வரு வதற்கான ஆபத்து முதுமையில் அதிகம் ஏற்படு கிறது. வயதாகும் செயல்முறையை தாமதப்படுத்தி னால் அதன் மூலம் கூடுதல் காலம் நாம் தரமான வாழ்வு வாழமுடியும். உலகளவில் இப்போது முதியோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இம்மருந்தின் மூலம் அதைக் கட்டுப்படுத்த லாம். மருத்துவ செலவுகளைக் குறைக்கமுடி யும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கலோரி கட்டுப்பாட்டுடன் உள்ள உணவு உண்பதற்கு சமமான பயனை இத்தகைய மருந்துகள் தரு கின்றன. படிப்படியாக கலோரி குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால் நீண்ட கால நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த ஆய்வு கள் பெரும்பாலானவையும் எலிகள், சுண்டெலி களில் நடத்தப்பட்டன. நம்மைப் போல பல மரபணுக்களை அவை பெற்றுள்ளன. என்றாலும் நம்மிடம் உள்ளது போன்ற அதே மரபணுக்கள் அவற்றிடம் இல்லை. ராப்பமைசின் நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் இனப்பெருக்கத் திறனை குறைத்தல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் இல்லாமல் செய்ய விஞ்ஞானிகள் ராப்பமைசினை தன்னார்வ லர்களுக்கு சிறிய, குறைவான மற்றும் நடுத்தர அளவுகளில் கொடுத்து ஆராய்கின்றனர். இதன் ஆரம்ப முடிவுகள் நேர்மறையாக அமைந்துள்ளன. மனிதர்களிடம் நடந்துவரும் மெட்ஃபார்மின் ஆய்வு முடிவுகள் வரும் ஒரு சில ஆண்டுகளில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. “எவரும் கூடுதல் நாள் வாழ ராப்பமைசினை எழுதித் தரச் சொல்லி மருத்துவரிடம் ஓடக்கூடாது. இந்த கண்டுபிடிப்பை சிகிச்சைகளுக்கு பயன்படுத் தும் வகையில் மாற்றியமைக்க உதவும் ஆய்வு கள் இப்போது நடந்துவருகின்றன. இதன் மூலம் நாம் என்றேனும் ஒரு நாள் ஆசைப்படும்போது ஒரு சாக்லேட் துண்டை சுவைத்து சாப்பிடமுடியும்” என்று சாஹிதா சுல்தானோவா கூறுகிறார். மனிதன் ஆரோக்கி யத்துடன் நீண்ட நாள் வாழ இந்த கண்டு பிடிப்பு பெரிதும் உதவும் என்று கருதப்படு கிறது.