அமெரிக்க அடிமைத்தனத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டிய நேரம்
முரண் நகையாக டொனால்டு டிரம்ப்புக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். ஏனெனில் மோடி அரசு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நீண்டகாலமாகத் தேவைப்பட்ட திருத்தத்தை மேற்கொள்ள அவர் ஒரு கட்டாயத்தை உருவாக்கியுள்ளார்.
30 ஆண்டுகால அடிமைத்தன பாதை
கடந்த மூன்று தசாப்தங்களாக - வாஜ்பாய் அரசில் தொடங்கி, மன்மோகன் சிங் அரசு வழியாக, மோடி அரசில் வேகம் பெற்று - இந்தியா அமெரிக்கா வின் அடிமை நாடாக மாறும் பாதையில் செல்கிறது. இது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையையும் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளில் இறையாண்மையுடன் செயல்படும் வாய்ப்பையும் அரித்துவிட்டது. சமீப காலம் வரை மோடி அரசு பெருமையுடன் அமெரிக்காவுடன் அனைத்து ‘அடிப்படை’ இராணுவ ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டதாகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் புவிசார் அரசியல் உத்தியுடன் தன்னை இணைத்துக் கொண்ட தாகவும் அறிவித்தது. குவாட் கூட்டணி, இந்த வளர்ந்து வரும் அடிமை உறவின் வெளிப்பாடே. டிரம்ப்பின் முதல் ஆட்சிக்காலத்தில், இந்தியா அவரது ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைக ளுக்கு பணிவுடன் இணங்கி, நமக்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தாலும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை மோடி அரசு நிறுத்தியது. பின்னர் வெனிசுலாவிடமிருந்தும் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது.
இஸ்ரேல் ஆதரவும் ஈரான் எதிர்ப்பும்
டிரம்ப் மற்றும் மோடி இடையேயான தனிப்பட்ட நட்பை நம்பி அமெரிக்காவுடன் மேலும் நெருக்கம டையும் வாய்ப்பாக டிரம்ப்பின் இரண்டாவது வருகை கருதப்பட்டது. இந்த அணுகுமுறை, காசாவில் இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் இனப்படு கொலையில் அவமானகரமான மௌனத்துக்கு வழிவகுத்தது - இதை டிரம்ப் தீவிரமாக ஆதரிக்கி றார். நட்பு நாடான ஈரானின் அணுசக்தி நிறுவனங்கள் மீதான அமெரிக்க குண்டுவீச்சையும் இந்தியா கண்டிக்கவில்லை.
டிரம்ப்பின் தேசியவாத அழுத்தம்
ஆனால் டிரம்ப்பின் அதிதீவிர தேசியவாத நிலைப் பாடும், இந்தியாவை அச்சுறுத்த வரிவிதிப்பை ஆயுதமாகப் பயன்படுத்தும் அவரது உச்சநிலையும் மோடி மற்றும் பாஜகவாலும் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவை பாகிஸ்தானுடன் சமமாக நடத்துவதும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாததே! எதார்த்தம் என்னவென்றால், இந்தியாவும் பாகிஸ்தானும் அணுஆயுத நாடுகளாக மாறிய கணத்திலிருந்து, அவற்றுக்கிடையேயான எந்த இராணுவ மோதலும் அமெரிக்கா நடுவராக செயல் படும் வழியை திறந்துவிடுகிறது; ஏனெனில் இரு நாடுகளும் அமெரிக்காவுடன் ராணுவ சூழ்ச்சிகரத் திட்டங்களில் பங்கேற்று, அதுசார்ந்த உறவுகள் கொண்டுள்ளன.
அமெரிக்க மிரட்டல்கள்
டிரம்ப் ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன்பே, பைடன் அரசின் கீழ் இருந்த அமெரிக்கா, மோடி அரசுக்கு ‘ராணுவ சூழ்ச்சிக் கூட்டாளி’ என்ற முறை யிலான கடமைகளை நினைவுபடுத்தியது. மோடி ஜூலை 2024-இல் ரஷ்யா சென்று ஜனாதிபதி புடினைச் சந்தித்தபோது, பைடன் நிர்வாகம் அதிருப்தி தெரி வித்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “உறவை எளிதாக எடுத்துக்கொள்ளாதீர் கள்” என்று எச்சரித்தார்: “இந்தியா ராணுவக் கூட்டாண்மை விஷயங்களில் சுதந்திரத்தை விரும்பு கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் மோதல் காலங்களில் ராணுவ உத்திசார் சுதந்திரம் என்று எதுவுமில்லை” என்றார் அவர்.
வெளியுறவுக் கொள்கையின் சரிவு
தெற்காசியா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவுடன் கைகோர்த்ததன் விளைவுகள் காலப்போக்கில் வெளிப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிதைந்துள்ளது. தெற்காசியாவில் இந்தியா தனது அண்டை நாடுகளிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்க்கும் பயனற்ற முயற்சியும் பாகிஸ்தான் எதிர்ப்பை மையப்படுத்திய கொள்கையுமே இதற்குக் காரணம். வெளியுறவுக் கொள்கையில் இந்துத்துவ உலக நோக்கை இறக்குமதி செய்ததால் உலகில் இந்தி யாவின் தாக்கமும் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் உறவு மேம்பாடு
இந்தச் சூழலில், சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தும் சமீபத்திய நடவடிக்கைகளும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடியின் பயணமும், ஜி ஜின்பிங்குடனான இருதரப்பு சந்திப்பும் நேர் மறையான முன்னேற்றங்கள். கண்மூடித்தனமான சீன-எதிர்ப்பு நிலையைக் கைவிட்டு, இரு நாடுக ளுக்கிடையேயான வேறுபாடுகளைக் குறைக்க பொருத்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் உற்பத்தித் துறையை வளர்க்க சீன முதலீடுகளையும் தொழில்நுட்பத்தையும் பயன் படுத்துவதற்கான அபாரமான வாய்ப்பு உள்ளது. இதற்கு பல்வேறு துறைகளில் சீன நிறுவனங்களின் முதலீட்டுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும்.
பன்முனை உலகில் வாய்ப்புகள்
அமெரிக்கா தலைமையிலான சர்வதேச ஒழுங்கா னது தற்போது, வீழ்ச்சியின் பிடியில் உள்ளது; பன்முக உலகம் என்ற சவால் வலுவாக எழுந்துள்ளது. உண்மையில் வளர்ந்து வரும் பன்முனை உலகில் இந்தியா தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு களை, அமெரிக்க சார்பு கொள்கைகள் தடுத்துவிட்டது. பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உறுப்பினராக இந்தியா இந்த மன்றங்க ளை வளர்ப்பதற்கும் உயிர்ப்பிக்கவும் தனது முழு ஆற்றலையும் செலுத்தவில்லை. டிரம்ப் பிரிக்ஸின் மூன்று ஸ்தாபக உறுப்பு நாடுகள் மீது அதிகபட்ச வரிவிதித்ததும் தற்செய லல்ல - பிரேசில் மீது 50%, தென்னாப்பிரிக்கா மீது 30%, இந்தியா மீது 50%. இவை முறையே தென் அமெ ரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தும் உலகளாவிய தெற்கின் பிரதான நாடுகள். அடுத்த ஆண்டு இந்தியா பிரிக்சுக்கு தலைமை தாங்குகிறது. இது வணிகம் மற்றும் முதலீட்டில் உலக ளாவிய தெற்கின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் கொள்கைகளை உருவாக்க முன்னணியில் நிற்கும் வாய்ப்பு.
எந்தப்பாதை?
சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மீட்டெடுத்து, உண்மையான நீண்டகால ராணுவ உத்திசார் இறையாண்மையை உறுதிப்படுத்தும் புதிய பாதையில் தைரியமாகச் செல்லும் தீர்மானமும் தொலைநோக்கும் மோடி அரசுக்கு உள்ளதா? அல்லது டிரம்ப்பின் மூட மாற்றங்களில் அடுத்த சாதக மான திருப்பத்துக்காக காத்திருந்து, அடிமை நாடாக மாறும் பழைய பாதைக்கு திரும்பிச் செல்லுமா? இதுவே இப்போதைய கேள்வி.
