போருக்கு ஆதரவாக வேலை செய்ய மாட்டோம் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு உலக சமாதான நாள் அறைகூவல்
நியூயார்க்,ஆக.27- சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு (WFTU) உலகம் முழுவதும் உள்ள போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களை போருக்கு எதிராகவும் சர்வதேச அமைதிக்காகவும் அணிதிரள அழைப்பு விடுத்துள்ளது. ‘செப்டம்பர் 1’ ஆண்டுதோறும் உலக சமாதான நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டியே சர்வதேச தொழிற் சங்க கூட்டமைப்பானது நடப்பாண்டிற்கான சமாதான நாள் உறுதிமொழியாக “போருக்கு ஆதரவாக வேலை செய்யமாட்டோம்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது. செப்டம்பர் 1 சர்வதேச நடவடிக்கை நாளன்று போர்க்குணமிக்க தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தீவிரமாக போராட்டங் களிலும் இயக்கங்களிலும் பங்கேற்க வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளது. சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியின் நாஜி படை போலந்து மீது தாக்குதல் நடத்தியதன் நினைவு நாளான செப்டம்பர் 1 அன்று உலகில் அமைதி யை நிலை நிறுத்துவதற்கான போராட்டத்திற்கு ஆண்டுதோறும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுக்கும். தற்போது பாலஸ்தீனம், உக்ரைன், சூடான் என பல இடங்களில் ஏற்கனவே நடைபெற்று வரு கிற போர்கள் தீவிரமடைகின்றன. சில இடங் களில் புதிய போர்கள் வெடித்து வருகின்றன. இந்தப் போர்களின் மூலம் நடைபெறும் ஆயுத விற்பனை, அதிகரிக்கும் போர் பொருளா தாரமானது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளாகும். ராணுவத்திற்காக செய்யப்படும் செலவுகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. அதேசமயம், பாசிசம், இனவெறி மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான வெறுப்பு ஆகியவை மீண்டும் தலைதூக்கி வருகின்றன. இத்தகைய சூழலில், அமைதிக்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் அடிப்படை தேவையாகும். தொழிற்சங்கங்களின் போருக்கு எதிரான நிலைப்பாடு சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன் மீதான அக்கறைக் கொண்ட தொழிற் சங்க இயக்கங்கள் போர்கள், போர் தொடர்பான தலையீடுகளுக்கு எதிராக உறுதியாக நிற்கின் றன. 2025 ஆம் ஆண்டு நேட்டோ உச்சிமாநா ட்டில் அதன் உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ராணுவத்திற் காக மட்டும் 5 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவை சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு கடுமையாகக் கண்டிக்கிறது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தி யங்களில் ராணுவச் செலவுகள் உயர்ந்து வருகின்றன. உலகளவில் ராணுவத்திற்காக செய்யப்படும் செலவு 2 டிரில்லியன் டால ருக்கும் அதிகமாக உள்ள நிலையில் வெறும் 15 நாடுகள் மட்டுமே அதில் சுமார் 75 சதவீதமான செலவை செய்கின்றன. இது போர்களை அதி கரிப்பதுடன் ஒரு பெரிய ஏகாதிபத்தியப் போருக் கான ஆபத்தை அதிகரித்து மிக மோசமான விளை வுகள் ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. மக்களின் தேவை ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காகவும், ஏகபோக நிறுவனங்களின் இலாபத்திற்காகவும் நடக்கக்கூடிய போர்களுக்கும், இரத்தக்களறி களுக்கும் ஒரு நாட்டின் செல்வத்தை “முதலீடு” செய்யக்கூடாது. மக்களின் சிறந்த வாழ்க்கை நிலை, போதிய சுகாதாரம், தரமான கல்வி, கண்ணியமான ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்கள் என அவர்களது தேவைகளுக் காக பயன்படுத்த வேண்டும். l உலகின் அனைத்து ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் தலையீடுகளுக்கு உடனடியாக, நிபந்தனையற்ற வகையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். l நேட்டோ மற்றும் பிற ராணுவக் கூட்டணி களை கலைத்து, அணு ஆயுதங்களை முழுவது மாக ஒழிக்க வேண்டும். l உக்ரைன், ஏமன், சூடான், மத்திய கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் நடை பெறும் போர்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். l பாலஸ்தீன மக்களுக்கு எதிராகச் சொல்ல முடி யாத வகையில் நடத்தப்படும் குற்றங்களை கடுமையாகக் கண்டிக்கின் றோம். இனப்படுகொலை, இன அழிப்பு ஆகியவற்றுடன் பஞ்சத்தையும் அவர்களின் மீது கொடூரமான ஆயுதமாக பயன்படுத்து வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். l லெபனான், சிரியா மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக நம் தீவிரமான போராட்டத்தை நடத்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட அரபு பிராந்தியங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங் களை அகற்ற வேண்டும். அகதிகளின் திரும்புவதற்கான உரிமையையும், கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட 1967 ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதையும் உறுதி செய்ய வேண்டும். போர்களால் பாதிக்கப்படுவது சாமானியர்களே போருக்காகச் செய்யப்படும் செலவுகள், பொருளாதாரத் தடைகளின் காரணமாக விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்படும் சிக்கன நட வடிக்கைகளின் விளைவுகளின் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிக்கும் போர்களுக்காக சாமா னிய மக்கள் தங்கள் உயிரை விலையாகக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி மக்களின் இறை யாண்மை, சுதந்திரம் மற்றும் அவர்களின் சொந்த பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றை முழுமையாக மதிக்க வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் கூட்டணி நாடுகளால் பல்வேறு நாடு களுக்கு எதிராக விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளால் அந்நாடுகளில் உள்ள சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் நேரடி, தீங்கு விளைவிக்கும் தாக்கங்களையும் போர்ப் பொருளாதாரத்தையும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது. புவிசார் அரசியல், பொருளாதாரத் தடைகள் ஏகபோக நிறுவனங்களின் இலாபத்திற்காக நடக்கும் முதலாளித்துவப் போட்டிகளால் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் மரணம், வறுமை மற்றும் துன்பங்கள் ஏற்படுமே தவிர வேறு எதுவும் கிடைக்காது. போர் பொருளாதாரத்திற்கு எதிராக.... சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பானது தொடர்ந்து போர்ப் பொருளாதாரத்திற்கு எதி ராக நிற்கிறது. போர்களுக்கு ஆதரவாக வேலை செய்ய மறுக்கிறோம். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் நலன் சார்ந்த தொழிற்சங்க ங்களும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப் பின் ஆதரவாளர்களும் முன்களத்தில் நின்று போர்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தங்கள் நாடு எந்தவிதமான போரிலும் ஈடுபடு வதற்கு ஒவ்வொரு நாட்டுத் தொழிலாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கோ, ஏற்றுமதி செய்வதற்கோ, இட மாற்றம் செய்வதற்கோ வேலை செய்யக் கூடாது. அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். இஸ்ரே லில் ஆக்கிரமிப்புகள் மற்றும் போர்களுடன் தொடர்புடைய எந்தவொரு ஒத்துழைப்பு நட வடிக்கைகளையும் புறக்கணிக்க வேண்டும். “போருக்கு ஆதரவாக வேலைசெய்ய மாட்டோம்” என்ற முழக்கத்தின் கீழ் சர்வதேச நடவடிக்கை நாளன்று சர்வதேசத் தொழி லாளர்களும் போர்க்குணமிக்க தொழிற்சங் கங்களுக்கும் தீவிரமாகப் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் பங்கேற்க வேண்டும் என சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக அமைதிக்கான சர்வதேச உரையாட லையும் வர்க்கப் போராட்டத்தையும் வலுப் படுத்துவோம் என தனது அறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளது.